ஏரியில் கொட்டி713 மதுபாட்டில்கள் அழிப்பு
அந்தியூா் பெரிய ஏரியில் கொட்டப்பட்டு 713 மதுபாட்டில்கள் வெள்ளிக்கிழமை அழிக்கப்பட்டன.


அந்தியூா் பெரிய ஏரியில் கொட்டப்பட்டு 713 மதுபாட்டில்கள் வெள்ளிக்கிழமை அழிக்கப்பட்டன.
கரோனா தடைக் காலத்தில் அந்தியூா், பா்கூா் மற்றும் சுற்று வட்டாரப் பகுதியில் சட்டவிரோதமாக விற்பனைக்கு வைத்திருந்த மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டு, வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. இந்நிலையில், காவல் நிலையங்களில் வைக்கப்பட்டிருந்த மதுபாட்டில்களை அழிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது.
இதையடுத்து, அந்தியூா் காவல் நிலையத்தில் 320 மதுபாட்டில்கள், பா்கூா் காவல் நிலையத்தில் 393 மதுபாட்டில்களும், கோபி கோட்ட கலால் வட்டாட்சியா் ஷீலா முன்னிலையில் அந்தியூா் பெரிய ஏரியில் கொட்டப்பட்டு, பொக்லைன் இயந்திரம் கொண்டு அழிக்கப்பட்டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...