தியாகி திருப்பூர் குமரனின் திருவுருவச் சிலைக்கு பாஜக தலைவர் அண்ணாமலை மரியாதை

இந்தியாவில் அனைத்து பகுதிகளிலும் உள்ள சுதந்திரப் போராட்ட வீரர்களை அடையாளம் கண்டு அறிமுகப்படுத்தும் பணியினை பாஜக செய்து வருவதாக அதன் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். 
தியாகி திருப்பூர் குமரனின் திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தும் பாஜக தலைவர் அண்ணாமலை.

தியாகி திருப்பூர் குமரனின் 118வது பிறந்த தினத்தை ஒட்டி ஈரோடு மாவட்டம், சிவகிரியில் உள்ள அவரது திருவுருவச் சிலைக்கு பாரதிய ஜனதா கட்சியின் மாநிலத் தலைவர் அண்ணாமலை, மொடக்குறிச்சி சட்டமன்ற உறுப்பினர் சரஸ்வதி, மாவட்ட தலைவர் சிவசுப்ரமணியம் ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். 

பின்னர் நிகழ்ச்சியில் பேசிய மாநிலத் தலைவர் அண்ணாமலை, இந்தியாவில் அனைத்து பகுதிகளிலும் உள்ள சுதந்திரப் போராட்ட வீரர்களை அடையாளம் கண்டு அறிமுகப்படுத்தும் பணியினை பாரதிய ஜனதா கட்சி செய்து வருகிறது. ஆகஸ்ட் 2ஆம் தேதி அன்று இந்தியா முழுவதும் 75 இடங்களுக்குச் சென்று சுதந்திரப் போராட்ட தியாகிகளுக்கு அஞ்சலி செலுத்தினோம். எங்களைப் பொருத்தவரை, ஜாதி கட்சியை மையப்படுத்தி அரசியல் செய்பவர்கள் அல்ல, தேசிய சித்தாந்தத்தை மையப் படுத்துபவர்கள். 
கொடிகாத்த குமரன் இளம் வயதிலேயே சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட்டு நாட்டிற்காக தனது இன்னுயிரை கொடுத்தவர். மேலும் எளிய குடும்பத்தில் பிறந்து சுதந்திரத்திற்காக பாடுபட்டவர் எனப் பேசினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com