ஈரோட்டில் கோவை மண்டல அளவிலான கூடைப்பந்து போட்டி
ஈரோட்டில் கோவை மண்டல அளவிலான கூடைப்பந்து போட்டி நடந்தது. இதில் 7 மாவட்ட அணிகள் பங்கேற்று விளையாடின.


ஈரோட்டில் கோவை மண்டல அளவிலான கூடைப்பந்து போட்டி நடந்தது. இதில் 7 மாவட்ட அணிகள் பங்கேற்று விளையாடின.
ஈரோட்டில் கோவை மண்டல அளவிலான கூடைப்பந்து போட்டி ஈரோடு பாரதி வித்யா பவன் பள்ளி மைதானம், திண்டல் வேளாளர் கல்லூரி மைதானத்தில் நடந்தது. இதில், கோவை, திருப்பூர், நிலகிரி, ஈரோடு, சேலம், நாமக்கல், தர்மபுரி ஆகிய 7 மாவட்டத்தைச் சேர்ந்த 18 வயதுக்கு உட்பட அணிகள் விளையாடின. இதில், ஆண்கள், பெண்கள் என தனித்தனியாக போட்டிகள் நடத்தப்பட்டன.
ஆண்கள் போட்டியில் கோவை அணி முதலிடமும், சேலம் அணி இரண்டாமிடமும், நாமக்கல் அணி மூன்றாமிடமும் பிடித்தனர். இதேபோல், பெண்கள் அணியில் கோவை அணி முதலிடம், சேலம் அணி இரண்டாவது இடமும், ஈரோடு அணி மூன்றாவது அணியும் பிடித்து வெற்றி பெற்றனர். வெற்றி பெற்ற அணிகளுக்கான பரிசளிப்பு விழா நடந்தது.
இதையும் படிக்க- ஏமன்: வான்வழித் தாக்குதலில் ஹவுதி கிளர்ச்சியாளர்கள் 40 பேர் பலி
விழாவுக்கு ஈரோடு கூடைப்பந்து சங்க தலைவரும், சுதா மருத்துவமனையின் நிர்வாக இயக்குநருமான டாக்டர் சுதாகர் தலைமை தாங்கினார். சிறப்பு அழைப்பாளராக பாரதி வித்யா பவன் பள்ளி தாளாளர் டாக்டர் ராமகிருஷ்ணன் கலந்து கொண்டு வெற்றி பெற்ற அணிகளுக்கு பரிசு கோப்பைகள், பதக்கங்கள், சான்றிதழ்கள் போன்றவற்றை வழங்கினார்.
நிகழ்ச்சியில் துணை செயலாளர்கள் முத்துராஜா, சங்கர். பொருளாளர் வருண், ஈரோடு ஸ்பைஸ் ரவுண்ட் டேபிள் நிர்வாகிகள் செல்வகுமார், காமேஷ் மற்றும் தனுஷ்கோடி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இப்போட்டியில் வெற்றி பெற்ற முதல் இரண்டு இடம் பிடித்த அணிகள் மண்டலங்களுக்கு இடையேயான போட்டியில் விளையாட தகுதியும், அதன் மூலம் சிறந்த விளையாட்டு வீரர்களை தேர்வு செய்து மாநில அணியில் விளையாட தகுதி பெறுவர் என மாவட்ட கூடைப்பந்து சங்க நிர்வாகிகள் தெரிவித்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...