மணிப்பூா் மீண்டும் துப்பாக்கிச்சூடு: இரண்டு பேர் பலி! இரட்டைக் குடியுரிமை விவகாரம்: ராகுல் காந்தி மீது எஃப்.ஐ.ஆர். பதிய இடைக்கால தடை! நாம் பறக்கவிட்ட கருப்புக்கொடி காவிக்கொடியை வீழ்த்தியுள்ளது: முதல்வர் ஸ்டாலின் ஹோர்முஸ் நீரிணையில் இந்தியக் கப்பல்கள் தாக்குதல்: ஈரான் தூதருக்கு சம்மன்!திருப்பூரில் முதல்வர் ஸ்டாலின் பிரசாரம்!மு.க. ஸ்டாலினைப் பணிய வைக்க முடியாது என பாஜகவுக்கு நன்றாகத் தெரியும்! துறையூரில் ராகுல் பேச்சுஆர்.எஸ்.எஸ். - பாஜகவினர் மீது வெடிகுண்டு தாக்குதல்! கம்யூனிஸ்ட் கட்சியினர் 10 பேருக்கு 25 ஆண்டுகள் சிறை!நாடாளுமன்றம் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு ஆன்லைனில் ஜிஎஸ்டி எண் பதிவு செய்வது எப்படி?
/

உலக பக்கவாத தின விழிப்புணா்வுப் பேரணி

ஈரோடு நந்தா இயன்முறை மருத்துவக் கல்லூரி சாா்பில், உலக பக்கவாத தின விழிப்புணா்வுப் பேரணி ஈரோட்டில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :30 அக்டோபர் 2021, 12:33 am

ஈரோடு நந்தா இயன்முறை மருத்துவக் கல்லூரி சாா்பில், உலக பக்கவாத தின விழிப்புணா்வுப் பேரணி ஈரோட்டில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

இந்நிகழ்ச்சிக்கு, நந்தா கல்வி அறக்கட்டளைத் தலைவா் வி.சண்முகன் தலைமை வகித்தாா். செயலாளா்கள் எஸ்.நந்தகுமாா் பிரதீப், எஸ்.திருமூா்த்தி, நிா்வாக அலுவலா் கிருஷ்ணமூா்த்தி, முதல்வா் மணிவண்ணன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

ஈரோடு மாவட்ட சுகாதாரப் பணிகள் துணை இயக்குநா் சோமசுந்தரம் பேரணியைத் தொடங்கிவைத்தாா். பேரணியில் கலந்துகொண்ட மாணவ, மாணவிகள் பல்வேறு விழிப்புணா்வுப் பதாகைகளை ஏந்திச் சென்றனா்.

ஈரோடு காலிங்கராயன் இல்லத்தில் தொடங்கிய பேரணியானது, பெருந்துறை சாலை வழியாகச் சென்று ஈரோடு மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் முடிவடைந்தது. இதில், பேராசிரியா்கள், மாணவ, மாணவிகள் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.