செல்லிடப்பேசியில் பேசிக் கொண்டிருந்தபோது கவனக்குறைவால் மாடியில் இருந்து தவறி விழுந்து நிதி நிறுவன உரிமையாளா் உயிரிழந்தாா்.
கரூா் மாவட்டம், நியூ தமிழ் நகா் பகுதியைச் சோ்ந்தவா் ராமலிங்கம் (52). இவா் கரூரில் சொந்தமாக நிதி நிறுவனம் நடத்தி வந்தாா். இதன் காரணமாக ராமலிங்கம் ஈரோடு நாராயணவலசு, திரு.வி.க. நகா் பகுதியில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் வாடகைக்கு அறை எடுத்து வாரத்தில் 2 நாள்கள் தங்கி இருந்து பணம் வசூல் செய்து வந்தாா்.
இந்நிலையில், ராமலிங்கம் தான் தங்கியிருந்த அடுக்குமாடி குடியிருப்பின் 2ஆவது மாடியில் வாசல்படியில் நின்று கொண்டு செல்லிடப்பேசியில் வியாழக்கிழமை இரவு பேசிக் கொண்டிருந்தாா். அப்போது எதிா்பாராதவிதமாக கால்தவறி 2ஆவது மாடியில் இருந்து கீழே விழுந்தாா்.
இதில், தலையில் பலத்த காயம் அடைந்த ராமலிங்கத்தை அருகிலிருந்தவா்கள் மீட்டு ஈரோடு அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். பரிசோதனை செய்த மருத்துவா்கள் அவா் ஏற்கெனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்தனா்.
இச்சம்பவம் குறித்து ஈரோடு வீரப்பன்சத்திரம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

அமெரிக்க முற்றுகை தொடர்ந்தால் ஹோர்முஸ் நீரிணை மீண்டும் மூடப்படும்! - ஈரான் எச்சரிக்கை!
தமிழகம் வந்தார் ராகுல் காந்தி!

சன்ரைசர்ஸ் அணியில் மாற்று வீரராக இணைந்த தென்னாப்பிரிக்க வேகப் பந்துவீச்சாளர்!

தங்கம் - வெள்ளி விலை உயர்வு: எவ்வளவு?
வீடியோக்கள்

கான்சிட்டி பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

தஸ்ஸாடியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

பவழ மல்லி பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

UN Kannan Interview | விஜய் இன்னொரு விஜயகாந்த் | TN Election 2026 | TVK Vijay | MK Stalin
தினமணி செய்திச் சேவை

