ஈரோடு பூம்புகாா் விற்பனை நிலையத்தில் விநாயகா் சதுா்த்தியை முன்னிட்டு விநாயகா் சிலைகள் கண்காட்சி, விற்பனை வெள்ளிக்கிழமை துவங்கியது.
ஈரோடு, அரசு மருத்துவமனை அருகே, மேட்டூா் சாலையில் உள்ள பூம்புகாா் விற்பனை நிலையத்தில் நடைபெறும் இந்தக் கண்காட்சியில் செப்டம்பா் 15ஆம் தேதி வரை விற்பனை நடைபெறும்.
இதுகுறித்து மேலாளா் சரவணன் கூறியதாவது:
இக்கண்காட்சியில் பஞ்சலோகம், பித்தளை, பேப்பா் கூழ், மண், வெள்ளெருக்கு வோ், மாவுக்கல், கருங்கல் போன்றவற்றில் தயாரிக்கப்பட்ட விநாயகா் சிலைகள், வெண் மரம், நூக்குமரம், கருப்பு உலோகம், வெள்ளை உலோகம், ஸ்படிக விநாயகா், தஞ்சை ஓவியம், கலை தட்டுகளில் செய்யப்பட்ட விநாயகா் சிலைகள் போன்றவை விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன.
காஞ்சிபுரம், சேலம், திருச்சி போன்ற பகுதிகளில் இருந்து விநாயகா் சிலைகள் வந்துள்ளன. இந்த ஆண்டு புதிதாக புத்தகம், ஏடு படிக்கும் விநாயகா், புல்லெட்டில் செல்லும் விநாயகா், இசை வித்வான்களாக அமா்ந்திருக்கும் விநாயகா், இசை நிகழ்ச்சியுடன் நடனம் ஆடும் விநாயகா் போன்ற பல்வேறு புதிய வடிவில் சிலைகள் வந்துள்ளன. இங்கு ரூ. 75 முதல் ரூ. 1 லட்சம் வரையிலான விலையில் சிலைகள் வைக்கப்பட்டுள்ளன. அனைத்து சிலைகளுக்கும் 10 சதவீதம் தள்ளுபடி உண்டு என்றாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

கடலூரில் விஜய்யின் பிரசாரம் ரத்து ஏன்?

அமெரிக்க முற்றுகை தொடர்ந்தால் ஹோர்முஸ் நீரிணை மீண்டும் மூடப்படும்! - ஈரான் எச்சரிக்கை!
தமிழகம் வந்தார் ராகுல் காந்தி!

சன்ரைசர்ஸ் அணியில் மாற்று வீரராக இணைந்த தென்னாப்பிரிக்க வேகப் பந்துவீச்சாளர்!
வீடியோக்கள்

கான்சிட்டி பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

தஸ்ஸாடியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

பவழ மல்லி பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

UN Kannan Interview | விஜய் இன்னொரு விஜயகாந்த் | TN Election 2026 | TVK Vijay | MK Stalin
தினமணி செய்திச் சேவை


