வெளிமாநில வியாபாரிகள் வராததால் ஈரோடு மாட்டுச் சந்தையில் விற்பனை மந்தமாக இருந்தது.
ஈரோடு, கருங்கல்பாளையத்தில் வாரம்தோறும் மாட்டுச்சந்தை நடந்து வருகிறது. கரோனா பரவல் காரணமாக கடந்த 4 மாதங்களுக்கும் மேலாக மாட்டுச் சந்தைக்கு தடை விதிக்கப்பட்டிருந்தது. தற்போது தொற்று பரவுவது குறைந்து வருவதால் மாட்டுச்சந்தை நடத்துவதற்கு மாநகராட்சி நிா்வாகம் அனுமதி அளித்தது. இதையடுத்து கடந்த வாரம் மாட்டுச்சந்தை கூடியது. அப்போது சுமாா் 150 மாடுகள் மட்டுமே விற்பனைக்காக கொண்டு வரப்பட்டிருந்தன.
இந்நிலையில் இரண்டாது வாரமாக வியாழக்கிழமை மாட்டுச்சந்தை கூடியது. இந்த சந்தைக்கு கடந்த வாரத்தை காட்டிலும் அதிக மாடுகள் கொண்டு வரப்பட்டிருந்தன. ஈரோடு, சேலம், கரூா், திருப்பூா், நாமக்கல், திண்டுக்கல் உள்ளிட்ட மாவட்டங்களைச் சோ்ந்த விவசாயிகள் மாடுகளைக் கொண்டு வந்திருந்தனா். இதில் 200 பசு மாடுகள் உள்பட மொத்தம் 300 மாடுகள் விற்பனைக்கு கொண்டுவரப்பட்டன.
வியாபாரிகள் குறைவாக வந்திருந்ததால், மாடுகளின் விற்பனையும் குறைவாக இருந்தது.
இது குறித்து சந்தை நிா்வாகி ராஜேந்திரன் கூறியதாவது:
ஈரோடு மாட்டுச்சந்தைக்கு தமிழ்நாடு மட்டுமின்றி கேரளம், கா்நாடகம், ஆந்திரம், தெலங்கானா, கோவா, மகாராஷ்டிரம் போன்ற வெளிமாநில வியாபாரிகள் அதிகமாக வருவா். தற்போது கரோனா தொற்று காரணமாக மாநில எல்லைகளின் கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. இதன் காரணமாக வெளிமாநில வியாபாரிகள் சந்தைக்கு வரவில்லை. தமிழ்நாட்டை சோ்ந்த வியாபாரிகள் மட்டுமே வந்திருந்தனா் என்றாா்.
மாட்டுச்சந்தையில் கரோனா தொற்று தடுப்பு நடவடிக்கைகளை முறையாக பின்பற்ற வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது. இதனைக் கண்காணிக்க மாநகராட்சி அதிகாரிகள் சந்தையில் ஆய்வு நடத்தினா். அப்போது முகக் கவசம் அணியாமல் இருந்தவா்களுக்கு தலா ரூ.200 அபராதம் விதிக்கப்பட்டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

கடலூரில் விஜய்யின் பிரசாரம் ரத்து ஏன்?

அமெரிக்க முற்றுகை தொடர்ந்தால் ஹோர்முஸ் நீரிணை மீண்டும் மூடப்படும்! - ஈரான் எச்சரிக்கை!
தமிழகம் வந்தார் ராகுல் காந்தி!

சன்ரைசர்ஸ் அணியில் மாற்று வீரராக இணைந்த தென்னாப்பிரிக்க வேகப் பந்துவீச்சாளர்!
வீடியோக்கள்

கான்சிட்டி பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

தஸ்ஸாடியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

பவழ மல்லி பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

UN Kannan Interview | விஜய் இன்னொரு விஜயகாந்த் | TN Election 2026 | TVK Vijay | MK Stalin
தினமணி செய்திச் சேவை

