சத்தியமங்கலம்: மலைக்கிராமங்களுக்கு மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் அனுப்பி வைப்பு

சத்தியமங்கலம் புலிகள் காப்பகம், தாளவாடி, கடம்பூர் கேர்மாளண் மலைக்கிராமங்களில் வனவிலங்குகள் நடமாட்டம் உள்ள வாக்குச்சாவடிகளுக்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்புடன் மின்னணு வாக்குப்பதிவு
சத்தியமங்கலம்: மலைக்கிராமங்களுக்கு மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் அனுப்பி வைப்பு

சத்தியமங்கலம் புலிகள் காப்பகம், தாளவாடி, கடம்பூர் கேர்மாளண் மலைக் கிராமங்களில் வனவிலங்குகள் நடமாட்டம் உள்ள வாக்குச்சாவடிகளுக்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்புடன் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் எடுத்துச் செல்லப்பட்டன.

சட்டப்பேரவை தேர்தலுக்காக பவானிசாகர் தொகுதி 29 மண்டங்களாக பிரிக்கப்பட்டு 374 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. அடர்ந்த காட்டுப்பகுதியான தாளவாடி வனப்பகுதியில் 68 வாக்குச்சாவடிகளும் கடம்பூர் மற்றும் கேர்மாளண் மலைக்கிராமங்களில் 36 வாக்குச்சாவடிகள் என 104 வாக்குச்சாவடிகள் உள்ளன.

தேர்தல் செவ்வாய்க்கிழமை நடைபெறுவதையொட்டி, அனைத்து வாக்குச்சாவடிகளுக்கு வாக்குப்பதிவு எந்திரங்கள் அனுப்பும் பணியில் தேர்தல் நடத்தும் அலுவலர் உமா சங்கர், உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் ரவிசங்கர் ஆகியோர் கொண்ட குழுவினர் திங்கள்கிழமை ஈடுபட்டனர். 

வாக்குப்பதிவு எந்திரங்கள் நல்ல முறையாக சென்று வேண்டுமென பூஜை செய்து வாக்குப்பதிவு எந்திரங்கள் அனுப்பும் பணி தொடங்கியது. சத்தியமங்கலம் வட்டாட்சியர் அலுவலகத்தில் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் ஆய்வுக்குட்படுத்தப்பட்டு சம்பந்தப்பட்ட வாக்குச்சாவடிகளுக்கு பலத்த போலீஸ் பாதுகாப்புடன் அனுப்பி வைக்கப்பட்டன. 

லாரியில் வாக்குப்பதிவு எந்திரங்கள் கண்ட்ரோல் யூனிட் மற்றும் விவிபேட் எந்திரங்கள் பழுது ஏற்பாட்டால் மாற்று இயந்திரங்கள் மற்றும் வாக்கு பதிவிற்கு தேவையான வாக்காளர் பதிவு படிவம், பேலட் பேப்பர், அழியாத மை, ரப்பர் ஸ்டாம்ப் உள்ளிட்ட எழுது பொருள்கள், பசை உள்ளிட்ட 36 வகையான பொருட்கள் அனுப்பப்பட்டன.

இதையும் படிக்கலாமே.. தலைவர்கள் ஒரு பார்வை...

அடர்ந்த மலைப்பகுதிக்கு செல்லும் வாகனங்களில் வனப்பாதுகாப்புப்படை, சிறப்பு அதிரடிப்படை மற்றும் துணை ராணுவத்தினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனர். 

மேலும் மலைப்பகுதி வாக்குப்பதிவு மையங்களில் வனவிலங்குகளின் தொந்தரவுகளை கட்டுப்படுத்த வனத்துறையினர் வயர்லெஸ் தகவல் தொழில்நுட்பத்துடன் வனத்துறையினர் உடன் சென்றனர்.

துப்பாக்கி ஏந்திய போலீசாரும் வாக்குச்சாவடிக்கு சென்றனர். செல்போன் சேவை இல்லாத வாக்குச்சாவடிகளில் தேர்தல் ஆணையத்துடன் தொடர்பு கொள்ள வயர்லெஸ் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com