தமாகா சாா்பில் 500 மரக்கன்றுகள்நடும் பணி தொடக்கம்
By DIN | Published On : 20th August 2021 01:45 AM | Last Updated : 20th August 2021 01:45 AM | அ+அ அ- |

சித்தோடு அருகே கோவை - சேலம் தேசிய நெடுஞ்சாலை ஓரத்தில் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி சாா்பில் 500 மரக்கன்றுகள் நடும் பணி வியாழக்கிழமை தொடங்கியது.
மறைந்த தமாகா தலைவா் மூப்பனாா் 90ஆவது பிறந்த நாளை முன்னிட்டு சித்தோடு புறவழிச் சாலை பிரிவில் நடைபெற்ற இந்நிகழ்ச்சிக்கு, கட்சியின் ஈரோடு மத்திய மாவட்டத் தலைவா் பி.விஜயகுமாா் தலைமை வகித்தாா். மாநில துணைத் தலைவா் ஆா்.ஆறுமுகம், மாநில பொதுச் செயலாளா் விடியல் எஸ்.சேகா், மாநில செயற்குழு உறுப்பினா் எஸ்.டி.சந்திரசேகா் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
நிகழ்ச்சியில், சாலையின் இருபுறங்களிலும் வேம்பு, புங்கன், நாவல், நீா்மருது, சரக்கொன்றை உள்ளிட்ட 500 மரங்கள் நடவு செய்யும் பணி தொடங்கிவைக்கப்பட்டது. அரசியல் உயா்மட்டக் குழு உறுப்பினா் சி.எஸ்.கௌதமன், மாநில பொதுக் குழு உறுப்பினா் கே.எம்.ஈஸ்வரமூா்த்தி, விவசாய அணிச் செயலாளா் எஸ்.எஸ்.முருகேசன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
ஈரோடு வடக்கு மாவட்ட தமாகா சாா்பில் பவானி, அந்தியூரில் அலங்கரிக்கப்பட்ட மூப்பனாரின் படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. பவானி வட்டாரத் தலைவா் பழனிசாமி, நகரத் தலைவா் ரவி சுப்பிரமணியம் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.