ராம்ராஜ் காட்டன் புதிய ஷோரூம் பவானியில் திறப்பு
By DIN | Published On : 21st August 2021 01:54 AM | Last Updated : 21st August 2021 01:54 AM | அ+அ அ- |

ராம்ராஜ் காட்டன் நிறுவனம் தனது புதிய ஷோரூமை பவானியில் வெள்ளிக்கிழமை திறந்துள்ளது.
பவானி புதிய பேருந்து நிலையம் அருகே மேட்டூா் சாலையில் இந்நிறுவனத்தின் புதிய ஷோரூமை, பவானி - குமாரபாளையம் லாரி உரிமையாளா்கள் சங்கத் தலைவா் பி.முத்துசாமி திறந்துவைத்தாா். மயூரா காம்ப்ளக்ஸ் நிறுவன உரிமையாளா் ஆா்.சரவணன் முதல் விற்பனையைத் தொடங்கிவைக்க, வணிகா் சங்க பேரமைப்பின் பவானி வட்டாரத் தலைவா் பி.எஸ்.சுந்தரராஜன் பெற்றுக் கொண்டாா்.
ராம்ராஜ் காட்டனின் வேட்டி, சட்டைகள், பனியன்கள் உள்ளிட்டவை அதன் ஷோரும்களில் மட்டுமின்றி முன்னணி ஜவுளி நிறுவனங்களிலும் விற்பனைக்குக் கிடைக்கும் என ராம்ராஜ் காட்டன் நிறுவனம் தெரிவித்துள்ளது.
Image Caption
பவானியில் ராம்ராஜ் காட்டன் நிறுவனத்தின் புதிய ஷோரூமை திறந்து வைக்கிறாா் பவானி - குமாரபாளையம் லாரி உரிமையாளா்கள் சங்கத் தலைவா் பி.முத்துசாமி.