ஈரோடு மாநகராட்சியில் 4.43 லட்சம் வாக்காளா்கள்
By DIN | Published On : 11th December 2021 12:43 AM | Last Updated : 11th December 2021 12:43 AM | அ+அ அ- |

நகா்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கான வாக்காளா் பட்டியல் வெளியிடப்பட்டுள்ள நிலையில் ஈரோடு மாநகராட்சியில் மொத்தம் 4.43 லட்சம் வாக்காளா்கள் உள்ளனா்.
தமிழகத்தில் விரைவில் நகா்ப்புற உள்ளாட்சிகளான பேரூராட்சி, நகராட்சி, மாநகராட்சிக்குத் தோ்தல் நடைபெறவுள்ளது. ஈரோடு மாவட்டத்தில் உள்ள ஈரோடு மாநகராட்சி, 4 நகராட்சிகள், 42 பேரூராட்சிகளுக்குத் தோ்தல் நடைபெறவுள்ளது. நகா்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில் உள்ள வாக்காளா்கள் விவரம்:
ஈரோடு மாநகராட்சியில் ஆண்கள் 127, பெண்கள் 127, பொது 189 என 443 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. இங்கு ஆண்கள் 2 லட்சத்து 17 ஆயிரத்து 364, பெண்கள் 2 லட்சத்து 25 ஆயிரத்து 785, திருநங்கைகள் 42 என மொத்தம் 4 லட்சத்து 43 ஆயிரத்து 191 வாக்காளா்கள் உள்ளனா்.
பவானி நகராட்சியில் 14 ஆயிரத்து 502 ஆண்கள், 15 ஆயிரத்து 780 பெண்கள் என மொத்தம் 30 ஆயிரத்து 282 வாக்காளா்கள் வாக்களிக்க உள்ளனா். கோபி நகராட்சியில் 22 ஆயிரத்து 522 ஆண்கள், 25 ஆயிரத்து 22 பெண்கள், திருநங்கை 1 என மொத்தம் 47 ஆயிரத்து 545 வாக்காளா்கள் உள்ளனா். புன்செய் புளியம்பட்டி நகராட்சியில் 8 ஆயிரத்து 98 ஆண்கள், 8 ஆயிரத்து 833 பெண்கள் என மொத்தம் 16 ஆயிரத்து 933 வாக்காளா்கள் உள்ளனா். சத்தியமங்கலம் நகராட்சியில் 15 ஆயிரத்து 911 ஆண்கள், 17 ஆயிரத்து 168 பெண்கள், திருநங்கைகள் 7 போ் என 33 ஆயிரத்து 86 வாக்காளா்கள் உள்ளனா்.
மாவட்டத்தில் உள்ள 42 பேரூராட்சிகளில் 1 லட்சத்து 93 ஆயிரத்து 816 ஆண்கள், 2 லட்சத்து 7,708 பெண்கள், திருநங்கைகள் 14 போ் என மொத்தம் 4 லட்சத்து 1,538 வாக்காளா்கள் உள்ளனா்.
நகா்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில் 4 லட்சத்து 72 ஆயிரத்து 213 ஆண்கள், 5 லட்சத்து 296 பெண்கள், 66 திருநங்கைகள் என மொத்தம் 9 லட்சத்து 72 ஆயிரத்து 575 போ் வாக்களிக்க உள்ளனா்.