தமிழக விவசாயிகள் சங்கத்தினர்.
தமிழக விவசாயிகள் சங்கத்தினர்.

சத்தியமங்கலம்: நான்குவழிச்சாலைக்கு நில உரிமையாளரின் அனுமதியின்றி கையகப்படுத்தக்கூடாது

மேற்குப்புற நான்குவழிச்சாலைக்கு நில உரிமையாளர்களின் அனுமதியின்றி நிலத்தை கையகப்படுத்தக்கூடாது என தமிழக விவசாயிகள் சங்கம் மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றியுள்ளது.

மேற்குப்புற நான்குவழிச்சாலைக்கு நில உரிமையாளர்களின் அனுமதியின்றி நிலத்தை கையகப்படுத்தக்கூடாது என தமிழக விவசாயிகள் சங்கம் மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றியுள்ளது.
 தமிழக விவசாயிகள் சங்கத்தின் திருப்பூர், ஈரோடு மற்றும் கோவை மாவட்ட கோரிக்கை மாநாடு புன்செய் புளியமப்டடியில் நடைபெற்றது. இக்கூட்டத்துக்கு 3 மாவட்ட விவசாய சங்க பிரதிநிதிகள் பங்கேற்றனர். கூட்டடத்தில் மக்கள் பிரச்னைக்கு சிறப்பாக பணியாற்றி தீர்வு கண்ட விவசாயிகளுக்கு நாராயணசாமி விருது வழங்கப்பட்டது. அதனைத்தொடர்ந்து மாநாட்டில் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. 
தமிழக விவசாயிகளின் கூட்டுறவு கடன் தள்ளுபடி மட்டும் விவசாயிகளின் பிரச்னைக்கு தீர்வு ஆகாது. தேசிய வங்கிகளில் வாங்கிய அனைத்து கடன்கள்  தள்ளுபடி செய்ய வேண்டும். வன விலங்குகளால் பயிர்ச்சேதம் தொடர்ந்து ஏற்படுகிறது. இதனை தடுக்க வனத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும். குளம் குட்டை நிரம்பும் திட்டத்தில் 3 மாவட்டங்களிலும் விடுபடாமல் அனைத்து குளங்களும் நிரப்பப்பட வேண்டும். 
மேற்கு புறவழிச்சாலை அமைக்கும் பணிக்கு நிலம் கையகப்டுத்தும் திட்டத்தை வெளிப்படையாக அறிவிக்க வேண்டும். நிலஉரிமையாளர்களின் கருத்து கேட்ட பிறகு அளவுகோல் நட்டு சந்தைமதிப்பில் இருமடங்கு வழங்கிடவேண்டும். பவானிசாகர் கீழ்பவானி வாய்க்கால் மண்கரை என்பதால் ஊற்றுநீர் விவசாய நிலங்களுக்கு பாய்ந்தோடுகிறது. 
கான்கிரீட் தளம் அமைத்தால் விவசாயம் பாதிக்கும் என்பதால் இதற்கு இந்த மாநாடு எதிர்ப்பு தெரிவிக்கிறது. பூரண மதுவிலக்குவரும் வரை கள் இறக்க அரசு அனுமதி அளிக்க வேண்டும் என தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. திருப்பூர், கோவை மற்றும் ஈரோடு மாவட்டத்தைச் சேர்ந்த விவசாயிகள் பங்கேற்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com