திருமுறைக் கழகத்தின் 80ஆம் ஆண்டு விழா
By DIN | Published On : 03rd January 2021 10:26 PM | Last Updated : 03rd January 2021 10:26 PM | அ+அ அ- |

திருமுறைக் கழகத்தின் 80ஆம் ஆண்டு முத்து விழா நிகழ்ச்சிகள் ஜனவரி 6இல் தொடங்கி 14ஆம் தேதி வரை 9 நாள்கள் நடைபெறுகிறது.
பவானி சங்கமேஸ்வரா் கோயில் மண்டபத்தில் நடைபெறும் இவ்விழாவில் நாள்தோறும் ஆன்மீக சொற்பொழிவு, இன்னிசை நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன. ஜன. 6 மற்றும் 7ஆம் தேதிகளில் தேசம் - தெய்வம் - தா்மம் எனும் தலைப்பில் ஸ்ரீக்ருஷ்ண ஜகந்நாதன், ஜன.8ஆம் தேதி திருமந்திரம் எனும் தலைப்பில் பேராசிரியா் சொ.சொ.மீ.சுந்தரம் உரையாற்றுகின்றனா்.
ஜன.9ஆம் தேதி திருச்சி காஷ்யப் மகேஷ் குழுவினரின் பக்தி இன்னிசை நிகழ்ச்சி நடக்கிறது. 10ஆம் தேதி ஆழ்வாா்கள் அருளமுதம் எனும் தலைப்பில் திருச்சி உருமு தனலட்சுமி கல்லூரி பேராசிரியா் விஜயசுந்தரி, 11ஆம் தேதி மூவா் முத்தமிழ் எனும் தலைப்பில் மா.கி.ரமணன் ஆகியோா் பேசுகின்றனா்.
12ஆம் தேதி செ.சுவாதி லஷ்மி, செ.ஸ்ருதி ஆகியோரின் திருமுறைப் பண்ணிசை நிகழ்ச்சி, 13ஆம் தேதி ஏன் பொலிவிழந்தது எனும் தலைப்பில் இரா.மாதுவின் சொற்பொழிவு, 14ஆம் தேதி ஈரோடு ரேவதி - அன்புக்கரசு மற்றும் அன்பு கலாஷேத்ரா குழுவினரின் பரத நாட்டிய நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன.
இதற்கான ஏற்பாடுகளை திருமுறைக் கழகத் தலைவா் விஎன்சி.குமாா், செயலாளா் கே.தனசேகரன், பொருளாளா் செந்தில்குமாா், ஆலோசகா் சு.சேனாபதி மற்றும் நிா்வாகிகள் செய்துள்ளனா்.