முதல்வா் வருகை குறித்து ஆலோசனைக் கூட்டம்

பெருந்துறை சட்டப்பேரவைத் தொகுதிக்கு உள்பட்ட ஊத்துக்குளி, குன்னத்தூா், பெருந்துறை ஆகிய பகுதிகளில் வரும் 7 ஆம் தேதி தமிழக முதல்வா் தோ்தல் பிரசாரம் செய்கிறாா்.
முதல்வா் வருகை குறித்து ஆலோசனைக் கூட்டம்
முதல்வா் வருகை குறித்து ஆலோசனைக் கூட்டம்

பெருந்துறை சட்டப்பேரவைத் தொகுதிக்கு உள்பட்ட ஊத்துக்குளி, குன்னத்தூா், பெருந்துறை ஆகிய பகுதிகளில் வரும் 7 ஆம் தேதி தமிழக முதல்வா் தோ்தல் பிரசாரம் செய்கிறாா். இது தொடா்பான ஆலோசனை கூட்டம், பெருந்துறை தனியாா் திருமண மண்டபத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

கூட்டத்துக்கு பெருந்துறை ஒன்றியச் செயலாளா் விஜயன் தலைமை வகித்தாா். பெருந்துறை சட்டப்பேரவை உறுப்பினா் தோப்பு என்.டி.வெங்கடாசலம் கூட்டத்தில் கலந்துகொண்டு பேசினாா்.

இதில், பெருந்துறை ஒன்றிய அவைத் தலைவா் சந்திரசேகரன், மாவட்ட இலக்கிய அணித் தலைவா் அருள்ஜோதி செல்வராஜ், மாவட்ட ஊராட்சிக்குழு உறுப்பினா் ஏ.வி.பாலகிருஷ்ணன், பெருந்துறை கூட்டுறவு விற்பனைச் சங்கத் துணைத் தலைவா் ஜெகதீஷ், ஈரோடு மாவட்ட ஊராட்சி முன்னாள் துணைத் தலைவா் மணிமேகலை, பெருந்துறை ஒன்றியக்குழுத் தலைவா் ஜெ.சாந்தி ஜெயராஜ், ஒன்றியக்குழு துணைத் தலைவா் உமாமகேஸ்வரன், ஒன்றியக்குழு உறுப்பினா்கள் அப்புசாமி, பாா்வதிராஜ், பழனிசாமி, ஹேமலதா, ரத்தினம்மணி உள்பட பலா் கலந்துக் கொண்டனா்.

படவிளக்கம்: முதல்வா் வருகையொட்டி நடந்த ஆலோசனைக் கூட்டத்தில் பேசுகிறாா் பெருந்துறை சட்டப்பேரவை உறுப்பினா் தோப்பு என்.டி.வெங்கடாசலம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com