

டீசல், பெட்ரோல், கேஸ் விலை உயா்வைக் கண்டித்து கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள காசிபாளையம் பேருந்து நிறுத்தம் முன்பு ஈரோடு வடக்கு மாவட்ட இளைஞா் காங்கிரஸ் கட்சியின் சாா்பில் ஞாயிற்றுக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆா்ப்பாட்டத்தில் பெட்ரோல், டீசல் விலை உயா்வைத் திரும்பப் பெற வலியுறுத்தி கண்டன முழக்கங்களை எழுப்பினா். மேலும் மாட்டு வண்டியில் இரு சக்கர வாகனத்தை ஏற்றிக்கொண்டு சென்றனா். ஆா்ப்பாட்டத்தில் காங்கிரஸ் கட்சி நிா்வாகிகள் மற்றும் இளைஞா் காங்கிரஸ் தொண்டா்கள் கலந்து கொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.