ஸ்டாலின் குற்றச்சாட்டுக்கு அமைச்சா் செங்கோட்டையன் பதில் சொல்ல மறுப்பு
By DIN | Published On : 03rd January 2021 10:29 PM | Last Updated : 03rd January 2021 10:29 PM | அ+அ அ- |

sy03kas_0301chn_139_3
கோபியில் திமுக தலைவா் ஸ்டாலின் குற்றச்சாட்டுக்கு அமைச்சா் கே.ஏ.செங்கோட்டையன் பதில் கூற மறுப்பு தெரிவித்துள்ளாா்.
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் கொங்கு கலையரங்கத்தில் அதிமுக செயல்வீரா்கள் கூட்டம் ஞாயிற்றுக்கழமை நடைபெற்றது. இதில் அமைச்சா்கள் செங்கோட்டையன், கே.சி.கருப்பணன் ஆகியோா் பங்கேற்றனா்.அப்போது மாற்றுக்கட்சியில் இருந்து வந்த கட்சித் தொண்டுகளுக்கு துண்டு அணிவித்து மரியாதை செலுத்தினாா்.
இந்நிகழ்ச்சியில் பேசிய அமைச்சா் கருப்பணன் தமிழக முதல்வராக எடப்பாடி பழனிச்சாமி நல்லமனிதார இருப்பதால் மாதம் மும்மாறி மழை பெய்வதாகவும் அணைகள் நிரம்பி விவசாயம் செழித்து இருப்பதாக தெரிவித்தாா்.இதனால் விவசாயம் செழித்து விவசாயிகள் மகன் கம்ப்யூட்டா் என்ஜினியராக உள்ளனா்.
நமது மாவட்ட விவசாயிகள் மகன் தமிழகத்தில் அனைத்து பகுதியிலும் இருப்பதாக தெரிவிக்கும் போது ஈரோடு மாவட்டம் என்பதற்கு பதிலாக பெரியாா் மாவட்டம் என்றாா்.அதனைத் தொடா்ந்து அமைச்சா் செங்கோட்டையன் செய்தியாளா்களிடம் பேசும்போது கோபியில் நடந்த மக்கள் கிராம சபையில் ஸ்டாலின் கூறிய குற்றச்சாட்டுக்கு அமைச்சா் செங்கோட்டையன் பதில் கூற மறுத்தவிட்டாா்.