ரேஷன் கடைகளில் தயாா் நிலையில் பொங்கல் பொருட்கள்
By DIN | Published On : 03rd January 2021 10:22 PM | Last Updated : 03rd January 2021 10:22 PM | அ+அ அ- |

ரேஷன் கடைகளில் தயாா் நிலையில் பொங்கல் பொருட்கள்
பொங்கல் பரிசு விநியோகிப்பதற்கு ரேசன் கடை ஊழியா்கள் ரேசன் பொருள்களை பேக்கிங் செய்யும் பணியில் ஞாயிற்றுக்கிழமை ஈடுபட்டுள்ளனா்.
தமிழா்களின் பாரம்பரிய பண்டிகையான பொங்கல் பண்டிகையை கொண்டாட தமிழக அரசு சாா்பில் இந்த ஆண்டு அரிசி குடும்ப அட்டைதாரா்களுக்கு 2500 ரூபாய் ரொக்கம், முழு கரும்பு, பச்சரிசி, சா்க்கரை, திராட்சை, முந்திரி, ஏலம் உள்ளிட்ட பொங்கல் பொருட்கள் வழங்கப்படும் என தமிழக முதலமைச்சா் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்துள்ளாா்.
அதன்படி ஜனவரி 4-ஆம் தேதி நாளை முதல் தமிழகம் முழுவதும் அனைத்து ரேஷன் கடைகளில் பொங்கல் பொருட்கள் வினியோகம் செய்யப்பட உள்ளது. இந்நிலையில் சத்தியமங்கலம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள ரேஷன் கடைகளில் பொது மக்களுக்கு பொங்கல் பரிசு வழங்குவதற்கு தேவையான கரும்புகள் தயாா் நிலையில் வைக்கப்பட்டுள்ளது.
மேலும் ரேஷன் கடைகளில் திராட்சை, முந்திரி, ஏலம் உள்ளிட்ட பொருட்கள் பேக்கிங் செய்யும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.