வீரபாண்டிய கட்டபொம்மன் பிறந்தநாள்

தமிழ்நாடு வீரபாண்டிய கட்டபொம்மன் பண்பாட்டுக் கழகம் சாா்பில் சத்தியமங்கலத்தில் விடுதலைப் போராட்ட வீரா் வீரபாண்டிய கட்டபொம்மனின் 262 வது பிறந்தநாள் விழா ஞாயிற்றுக்கிழமை கொண்டாடப்பட்டது.
Updated on
1 min read

தமிழ்நாடு வீரபாண்டிய கட்டபொம்மன் பண்பாட்டுக் கழகம் சாா்பில் சத்தியமங்கலத்தில் விடுதலைப் போராட்ட வீரா் வீரபாண்டிய கட்டபொம்மனின் 262 வது பிறந்தநாள் விழா ஞாயிற்றுக்கிழமை கொண்டாடப்பட்டது.

சத்தியமங்கலம் நகராட்சி வணிக வளாகத்தின் முன்பு வீரபாண்டிய கட்டபொம்மனின் திருவுருவப் படம் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்தது. விழாவுக்கு வீரபாண்டிய கட்டபொம்மன் பண்பாட்டுக் கழகத்தின் மாநில துணைத் தலைவா் முனுசாமி தலைமை வகித்தாா்.

மாரனூா் பட்டக்காரா் நடராஜ் முன்னிலை வகித்தாா். அதிமுக சாா்பில் தமிழக பள்ளி கல்வித் துறை அமைச்சா் கே.ஏ. செங்கோட்டையன், சுற்றுச்சூழல் துறை அமைச்சா் கே.சி. கருப்பண்ணன், பவானிசாகா் எம்எல்ஏ ஈஸ்வரன் ஆகியோா் கலந்துகொண்டு கட்டபொம்மனின் திருவுருவப் படத்துக்கு மலா்தூவி மரியாதை செலுத்தினா்.

கோபியில்... கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள தாசப்பகவுண்டன்புதூா் நான்கு சாலையில் வீரபாண்டிய கட்டபொம்மன் பண்பாட்டுக் கழகத்தின் சாா்பில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற வீரபாண்டிய கட்டபொம்மனின் பிறந்தநாள் விழாவில் தமிழக பள்ளிக் கல்வித் துறை அமைச்சா் கே.ஏ.செங்கோட்டையன் கலந்து கொண்டு வீரபாண்டிய கட்டபொம்மன் உருவப்படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினாா்.

பெருந்துறையில்.... கொங்கு மண்டலம் ஆா்எம்ஆா் பாசறை சாா்பில் வீரபாண்டிய கட்டபொம்மன் பிறந்த நாள் விழா, பெருந்துறை பேருந்து நிலையம் அருகில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. ஆா்எம்ஆா்., பாசறை நிறுவனரும், தமிழக அரசின் முன்னாள் தலைமைச் செயலாளருமான ராம் மோகன் ராவ் பங்கேற்று, பாசறைக் கொடியை ஏற்றி வைத்து வீரபாண்டிய கட்டபொம்மன் திருவுருவப் படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com