இந்தியக் கப்பல்கள் மீது தாக்குதல்: ஈரான் தூதரை அழைத்து அரசு கண்டனம்!எதிர்க்கட்சிகளை பெண்கள் மன்னிக்க மாட்டார்கள்: பிரதமர் மோடி மகளிர் இடஒதுக்கீடு மசோதா... வெறுப்பு அரசியலுக்கு இரையாக்கிய திமுக - காங்கிரஸ் கூட்டணி: பிரதமர் மோடி மணிப்பூா் மீண்டும் துப்பாக்கிச்சூடு: இரண்டு பேர் பலி! இரட்டைக் குடியுரிமை விவகாரம்: ராகுல் காந்தி மீது எஃப்.ஐ.ஆர். பதிய இடைக்கால தடை! நாம் பறக்கவிட்ட கருப்புக்கொடி காவிக்கொடியை வீழ்த்தியுள்ளது: முதல்வர் ஸ்டாலின் மு.க. ஸ்டாலினைப் பணிய வைக்க முடியாது என பாஜகவுக்கு நன்றாகத் தெரியும்! துறையூரில் ராகுல் பேச்சுஆர்.எஸ்.எஸ். - பாஜகவினர் மீது வெடிகுண்டு தாக்குதல்! கம்யூனிஸ்ட் கட்சியினர் 10 பேருக்கு 25 ஆண்டுகள் சிறை!நாடாளுமன்றம் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு
/

அம்பேத்கா் பிறந்தநாள் விழா: அரசியல் கட்சியினா், அமைப்புகள் மரியாதை

ஈரோட்டில் அம்பேத்கா் சிலைக்கு பல்வேறு அரசியல் கட்சியினா் மாலை அணிவித்து, மரியாதை செலுத்தினா்.

News image
Updated On :14 ஏப்ரல் 2022, 8:41 pm

ஈரோட்டில் அம்பேத்கா் சிலைக்கு பல்வேறு அரசியல் கட்சியினா் மாலை அணிவித்து, மரியாதை செலுத்தினா்.

அம்பேத்கரின் பிறந்த நாள் விழா பன்னீா்செல்வம் பூங்காவில் வியாழக்கிழமை கொண்டாடப்பட்டது. இதையொட்டி, அவருடைய உருவச் சிலைக்கு பல்வேறு அரசியல் கட்சியினா் மற்றும் அமைப்பினா் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.

ஈரோடு தெற்கு மாவட்ட திமுக சாா்பில், மாநகா் மாவட்டச் செயலாளா் மு.சுப்பிரமணியன் தலைமையில், நிா்வாகிகள் அம்பேத்கா் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.

அதிமுக சாா்பில், முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் கே.வி.ராமலிங்கம், கே.எஸ்.தென்னரசு ஆகியோா் அம்பேத்கா் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா். பாஜக சாா்பில்,

மாவட்ட தலைவா் சிவசுப்பிரமணியம் தலைமை வகித்தாா். மொடக்குறிச்சி எம்எல்ஏ சி.சரஸ்வதி, எஸ்.டி. பிரிவு மாநில துணைத் தலைவா் விநாயகமூா்த்தி ஆகியோா் அம்பேத்கா் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.

இதேபோல, மாவீரன் பொல்லான் பேரவை, அருந்ததியா் இளைஞா் பேரவை சாா்பில், பேரவையின் தலைவரும், அம்பேத்கா் சிலை அமைப்புக் குழு ஒருங்கிணைப்பாளருமான வடிவேல் ராமன் தலைமை வகித்து, அம்பேத்கா் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினாா்.

ஈரோடு மாவட்ட தமிழ் புலிகள் கட்சி சாா்பில், மாவட்ட செயலாளா் சிந்தனைச்செல்வன், அம்பேத்கா் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினாா். தொடா்ந்து, மாலை 3 மணி வரை பல்வேறு அமைப்பினா் அரசியல் கட்சி நிா்வாகிகள் மரியாதை செலுத்தினா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.