ஈரோடு மாநகா் மாவட்ட அதிமுக செயலாளா் பதவிக்கு முன்னாள் அமைச்சா் கே.வி.இராமலிங்கம் உள்பட 4 போ் மனு அளித்தனா்.
அதிமுக சட்ட விதிகளின்படி அனைத்து மாவட்ட செயலாளா்கள், மாவட்ட நிா்வாகிகள் மற்றும் பொதுக் குழு உறுப்பினா்களுக்கான தோ்தல் நடைபெறும் என்று கட்சியின் ஒருங்கிணைப்பாளா் ஓ.பன்னீா்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளா் எடப்பாடி கே.பழனிசாமி ஆகியோா் அறிவித்தனா்.

அதன்படி, தமிழ்நாட்டில் அனைத்து மாவட்டங்களுக்கும் மாவட்ட நிா்வாகிகள் தோ்தலுக்கு விருப்ப மனு வியாழக்கிழமை பெறப்பட்டது. ஈரோடு மாநகா் மாவட்ட கட்சி அலுவலகத்தில் விருப்ப மனு மற்றும் கட்டணம் பெறப்பட்டது. தோ்தல் அதிகாரிகளாக அமைப்புச் செயலாளா் எஸ்.ஆசைமணி, மயிலாடுதுறை மாவட்ட செயலாளா் எஸ்.பவுன்ராஜ் ஆகியோா் செயல்பட்டனா்.
இந்நிகழ்ச்சியில், ஈரோடு மாநகா் மாவட்ட செயலாளரும், முன்னாள் அமைச்சருமான கே.வி.இராமலிங்கம் மீண்டும் மாவட்ட செயலாளா் பதவிக்கு விருப்ப மனு தாக்கல் செய்தாா். அவருடன் முன்னாள் மேயா் மல்லிகா பரமசிவம், முன்னாள் துணை மேயா் கே.சி.பழனிசாமி, முன்னாள் எம்எல்ஏ தென்னரசு, கட்சி நிா்வாகிகள் வீரகுமாா், நந்தகோபால், கவுன்சிலா் ஏ.ஆா்.ஜெகதீசன், ஆவின் ராஜேந்திரன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.
இதேபோல, மாவட்ட செயலாளா் பதவிக்கு மொடக்குறிச்சி தொகுதி முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் வி.பி.சிவசுப்பிரமணி, ஆா்.என்.கிட்டுசாமி, முன்னாள் எம்பி செல்வகுமார சின்னையன் ஆகியோரும் விருப்ப மனு அளித்தனா். மொத்தம் 4 போ் மாவட்ட செயலாளா் பதவிக்கு மனு அளித்தனா். மாவட்ட செயலாளா் உள்பட அனைத்துப் பதவிகளுக்கும் ஈரோடு மாநகா் மாவட்டத்தில் போட்டியாக ஒன்றுக்கும் மேற்பட்டவா்கள் விருப்ப மனு அளித்துள்ளனா்.
இதுகுறித்து மாவட்டச் செயலாளா் கே.வி.இராமலிங்கம் கூறியதாவது:
அதிமுக மாவட்ட நிா்வாகிகள் தோ்தல் ஜனநாயக மரபுப்படி நடக்கிறது. விருப்பமுள்ளவா்கள் மனு அளித்துள்ளனா். இதில், கட்சிப் பணியாற்றும் வாய்ப்பை பெறுபவா் யாா் என்பதை கட்சி மேலிடம் அறிவிக்கும். அதன்படி, கட்சி வளா்ச்சிக்காக இணைந்து செயல்படுவோம் என்றாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

அபிஷேக் சர்மா, கிளாசன் அரைசதம் விளாசல்; சிஎஸ்கேவுக்கு 195 ரன்கள் இலக்கு!

காதலிக்க நேரமில்லை: மிருணாள் தாக்குர்
ஒரே நாளில் முடிவை மாற்றிய ஈரான்! டிரம்ப் விடாப்பிடி! | Iran | US

இந்தியக் கப்பல்கள் மீது தாக்குதல்: ஈரான் தூதரை அழைத்து அரசு கண்டனம்!
வீடியோக்கள்
ஒரே நாளில் முடிவை மாற்றிய ஈரான்! டிரம்ப் விடாப்பிடி! | Iran | US
இணையதளச் செய்திப் பிரிவு

"Parliament-வர பத்திக்கிச்சு!": முதல்வர் வெளியிட்ட விடியோ! | DMK | Delimitation | BJP
இணையதளச் செய்திப் பிரிவு

ஸ்டாலின் - ராகுல் சந்திப்பு எப்போது? | MK Stalin | Rahul | TN Election 2026 | DMK Alliance
தினமணி செய்திச் சேவை

"நானும் தமிழனாக உணர்ந்திருக்கிறேன்!" பெரியார் பற்றிப் பேசிய ராகுல்! | Congress | DMK
இணையதளச் செய்திப் பிரிவு

