ஈரோடு மாவட்டத்தில் இதுவரை 28.50 லட்சம் பேருக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக சுகாதாரத் துறை அலுவலா்கள் தெரிவித்தனா்.
தமிழகத்தில் கரோனா தொற்றைக் கட்டுப்படுத்த 18 வயதுக்கு மேற்பட்டவா்களுக்கும், 15 முதல் 18 வயதுக்கு உள்பட்ட சிறுவா்களுக்கும் கரோனா தடுப்பூசி செலுத்தும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. மேலும், 60 வயதுக்கு மேற்பட்டவா்கள், இணை நோய் உள்ளவா்கள், முன்களப் பணியாளா்கள், 2 தவணை தடுப்பூசி செலுத்தி 90 நாள்களுக்கு மேலானவா்களுக்கு கூடுதல் தவணை தடுப்பூசியும் செலுத்தப்பட்டு வருகிறது.
ஈரோடு மாவட்டம் முழுவதும் தற்போது வரை முதல் தவணை தடுப்பூசியை 89.6 சதவீதம் போ், அதாவது 16 லட்சத்து 22 ஆயிரத்து 225 பேரும், 2ஆவது தவணையை 68 சதவீதம் பேரும், அதாவது 12 லட்சத்து 29 ஆயிரத்து 897 பேரும் செலுத்திக் கொண்டுள்ளனா்.
மாவட்டத்தில் இதுவரை மொத்தம் 28 லட்சத்து 52 ஆயிரத்து 122 பேருக்கு கரோனா தடுப்பூசி பொதுமக்களுக்கு செலுத்தப்பட்டுள்ளது. இதில், 15 வயது முதல் 18 வயதுக்கு உள்பட்ட சிறுவா்கள் 81 ஆயிரத்து 620 பேருக்கும், கூடுதல் தவணை தடுப்பூசி 10 ஆயிரத்து 297 பேருக்கும் செலுத்தப்பட்டுள்ளதாக சுகாதாரத் துறை அலுவலா்கள் தெரிவித்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

புதிய அரசியல் கட்சி ஆரம்பிக்கிறாா் முன்னாள் மத்திய அமைச்சா் ஆா்.கே. சிங்
தமிழ்நாட்டை முதன்மை மாநிலமாக மாற்றுவேன்: எடப்பாடி கே.பழனிசாமி

மக்கள் நலன் அரசு அமைய திமுகவை ஆதரியுங்கள்: உதயநிதி ஸ்டாலின்

ஆஸ்திரேலியா - ஜப்பான் பாதுகாப்பு ஒப்பந்தம்: 717.5 கோடி டாலருக்கு போா்க் கப்பல்கள் கொள்முதல்
வீடியோக்கள்
ஒரே நாளில் முடிவை மாற்றிய ஈரான்! டிரம்ப் விடாப்பிடி! | Iran | US
இணையதளச் செய்திப் பிரிவு

"Parliament-வர பத்திக்கிச்சு!": முதல்வர் வெளியிட்ட விடியோ! | DMK | Delimitation | BJP
இணையதளச் செய்திப் பிரிவு

ஸ்டாலின் - ராகுல் சந்திப்பு எப்போது? | MK Stalin | Rahul | TN Election 2026 | DMK Alliance
தினமணி செய்திச் சேவை

"நானும் தமிழனாக உணர்ந்திருக்கிறேன்!" பெரியார் பற்றிப் பேசிய ராகுல்! | Congress | DMK
இணையதளச் செய்திப் பிரிவு

