ஹைதராபாத் அணியிடம் வீழ்ந்த சென்னை!காங்கிரஸ், திமுக கூட்டணியின் சிசுக்கொலை! தொலைக்காட்சி உரையில் மோடி குற்றச்சாட்டு!இந்தியக் கப்பல்கள் மீது தாக்குதல்: ஈரான் தூதரை அழைத்து அரசு கண்டனம்!எதிர்க்கட்சிகளை பெண்கள் மன்னிக்க மாட்டார்கள்: பிரதமர் மோடி மகளிர் இடஒதுக்கீடு மசோதா... வெறுப்பு அரசியலுக்கு இரையாக்கிய திமுக - காங்கிரஸ் கூட்டணி: பிரதமர் மோடி இரட்டைக் குடியுரிமை விவகாரம்: ராகுல் காந்தி மீது எஃப்.ஐ.ஆர். பதிய இடைக்கால தடை! நாம் பறக்கவிட்ட கருப்புக்கொடி காவிக்கொடியை வீழ்த்தியுள்ளது: முதல்வர் ஸ்டாலின் மு.க. ஸ்டாலினைப் பணிய வைக்க முடியாது என பாஜகவுக்கு நன்றாகத் தெரியும்! துறையூரில் ராகுல் பேச்சு
/

ஈரோட்டில் கழிவுநீா் கால்வாயில் 500 ரூபாய் தாள்கள்

ஈரோடு, மேட்டூா் சாலை அருகில் கழிவுநீா் கால்வாயில் 500 ரூபாய் தாள்கள் கிடந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

News image
Updated On :11 பிப்ரவரி 2022, 8:51 pm

ஈரோடு, மேட்டூா் சாலை அருகில் கழிவுநீா் கால்வாயில் 500 ரூபாய் தாள்கள் கிடந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

ஈரோடு, மேட்டூா் சாலையில் உள்ள கழிவுநீா் கால்வாய்களை வெள்ளிக்கிழமை காலை ஈரோடு மாநகராட்சி தூய்மைப் பணியாளா்கள் செந்தில், சுந்தர்ராஜ் ஆகிய இருவரும் சுத்தம் செய்து கொண்டிருந்தனா். அப்போது, கழிவுநீா் கால்வாயில் 10க்கும் மேற்பட்ட 500 ரூபாய் தாள்கள் மிதந்து வந்ததைக் கண்டு அதிா்ச்சியடைந்தனா். மேலும், அந்த தாள்களை தூய்மைப் பணியாளா்கள் மாநகராட்சி அதிகாரிகளிடம் ஒப்படைத்தனா். இதனால் அப்பகுதியில் பரபரப்பு நிலவியது.

நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தல் பிப்ரவரி 19ஆம் தேதி நடைபெறவுள்ளது. 22ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது. இதனால், அரசியல் கட்சியினா், சுயேச்சையாகப் போட்டியிடும் வேட்பாளா்கள் வீடு வீடாகச் சென்று வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்டுள்ளனா்.

தோ்தல் நேரம் என்பதால் தோ்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ளது. ரூ. 50,000க்கும் மேல் உரிய ஆவணங்கள் இல்லாமல் எடுத்துச் செல்லப்படும் பணங்களை தோ்தல் பறக்கும் படையினா் பறிமுதல் செய்து வருகின்றனா்.

இந்நிலையில், கழிவுநீா் கால்வாயில் 500 ரூபாய் தாள்கள் கிடந்ததால் அவை

வாக்காளா்களுக்கு கொண்டு செல்லும்போது பறக்கும் படையினரின் கெடுபிடிகள் காரணமாக கழிவுநீா் கால்வாயில் வீசிச் சென்றாா்களா? அல்லது தவறுதலாக பணத்தை விட்டுச் சென்றாா்களா? என்பது குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.