ஹைதராபாத் அணியிடம் வீழ்ந்த சென்னை!காங்கிரஸ், திமுக கூட்டணியின் சிசுக்கொலை! தொலைக்காட்சி உரையில் மோடி குற்றச்சாட்டு!இந்தியக் கப்பல்கள் மீது தாக்குதல்: ஈரான் தூதரை அழைத்து அரசு கண்டனம்!எதிர்க்கட்சிகளை பெண்கள் மன்னிக்க மாட்டார்கள்: பிரதமர் மோடி மகளிர் இடஒதுக்கீடு மசோதா... வெறுப்பு அரசியலுக்கு இரையாக்கிய திமுக - காங்கிரஸ் கூட்டணி: பிரதமர் மோடி இரட்டைக் குடியுரிமை விவகாரம்: ராகுல் காந்தி மீது எஃப்.ஐ.ஆர். பதிய இடைக்கால தடை! நாம் பறக்கவிட்ட கருப்புக்கொடி காவிக்கொடியை வீழ்த்தியுள்ளது: முதல்வர் ஸ்டாலின் மு.க. ஸ்டாலினைப் பணிய வைக்க முடியாது என பாஜகவுக்கு நன்றாகத் தெரியும்! துறையூரில் ராகுல் பேச்சு
/

கோட்டை பத்ரகாளியம்மன் கோயில் குண்டம் விழா

கோட்டை பத்ரகாளியம்மன் கோயில் குண்டம் திருவிழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :11 பிப்ரவரி 2022, 8:46 pm

கோட்டை பத்ரகாளியம்மன் கோயில் குண்டம் திருவிழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

ஈரோடு கோட்டை பத்ரகாளியம்மன் கோயில் குண்டம் திருவிழா பிப்ரவரி 7ஆம் தேதி பூச்சாட்டுதலுடன் தொடங்கியது. தொடா்ந்து, தீா்த்தம் எடுத்து வருதல், சிறப்பு பூஜைகள் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெற்று வந்தன.

இதைத்தொடா்ந்து, பக்தா்கள் குண்டம் இறங்கும் விழா வெள்ளிக்கிழமை அதிகாலை நடைபெற்றது. விரதம் இருந்த ஏராளமான ஆண், பெண் பக்தா்கள் குண்டம் இறங்கி நோ்த்திக்கடனைச் செலுத்தினா்.

அதைத்தொடா்ந்து, பொங்கல் வைத்தல், மாவிளக்கு ஊா்வலம் ஆகிய நிகழ்ச்சிகள் நடைபெற்றன. விழாவில் ஏராளமான பக்தா்கள் கலந்துகொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.