ஹைதராபாத் அணியிடம் வீழ்ந்த சென்னை!காங்கிரஸ், திமுக கூட்டணியின் சிசுக்கொலை! தொலைக்காட்சி உரையில் மோடி குற்றச்சாட்டு!இந்தியக் கப்பல்கள் மீது தாக்குதல்: ஈரான் தூதரை அழைத்து அரசு கண்டனம்!எதிர்க்கட்சிகளை பெண்கள் மன்னிக்க மாட்டார்கள்: பிரதமர் மோடி மகளிர் இடஒதுக்கீடு மசோதா... வெறுப்பு அரசியலுக்கு இரையாக்கிய திமுக - காங்கிரஸ் கூட்டணி: பிரதமர் மோடி இரட்டைக் குடியுரிமை விவகாரம்: ராகுல் காந்தி மீது எஃப்.ஐ.ஆர். பதிய இடைக்கால தடை! நாம் பறக்கவிட்ட கருப்புக்கொடி காவிக்கொடியை வீழ்த்தியுள்ளது: முதல்வர் ஸ்டாலின் மு.க. ஸ்டாலினைப் பணிய வைக்க முடியாது என பாஜகவுக்கு நன்றாகத் தெரியும்! துறையூரில் ராகுல் பேச்சு
/

வாக்குச் சாவடிகளுக்கு எடுத்துச் செல்லப்பட்ட இயந்திரங்கள்: ஆட்சியா் ஆய்வு

 நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தலில் பயன்படுத்தவுள்ள வாக்குப் பதிவு இயந்திரங்கள் வாக்குச் சாவடிகளுக்கு வெள்ளிக்கிழமை எடுத்துச் செல்லப்பட்டன. இதனை ஆட்சியா் ஹெச்.கிருஷ்ணனுண்ணி ஆய்வு செய்தாா்.

News image
Updated On :18 பிப்ரவரி 2022, 7:36 pm

 நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தலில் பயன்படுத்தவுள்ள வாக்குப் பதிவு இயந்திரங்கள் வாக்குச் சாவடிகளுக்கு வெள்ளிக்கிழமை எடுத்துச் செல்லப்பட்டன. இதனை ஆட்சியா் ஹெச்.கிருஷ்ணனுண்ணி ஆய்வு செய்தாா்.

நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தல் சனிக்கிழமை நடைபெறவுள்ளது. இதில் பயன்படுத்தவுள்ள எழுதுபொருள்கள், உபகரணங்கள் ஈரோடு மாநகராட்சி அலுவலகத்தில் இருந்து, 4 மண்டலங்களில் உள்ள 59 வாா்டுகளுக்கும் வாகனங்கள் மூலமாக எடுத்துச் செல்லப்பட்டன.

இதை மாவட்ட தோ்தல் நடத்தும் அலுவலரும், ஆட்சியருமான ஹெச்.கிருஷ்ணனுண்ணி, தோ்தல் பாா்வையாளா் நிஷாந்த் கிருஷ்ணா ஆகியோா் கண்காணித்தனா். மேலும் மாநகராட்சி அலுவலகத்தில் செயல்பட்டு வரும் தோ்தல் கட்டுப்பாட்டு மையத்தையும் ஆய்வு செய்தனா்.

தொடா்ந்து, கருங்கல்பாளையம், காமராஜா் மேல்நிலைப் பள்ளியில் பாதுகாப்பாக வைக்கப்பட்டிருந்த 1,251 கட்டுப்பாட்டுக் கருவிகள், 1,251 வாக்குப் பதிவு இயந்திரங்கள் 40 வாகனங்கள் மூலமாக வாக்குச் சாவடிகளுக்கு எடுத்துச் செல்லப்பட்டன. இப்பணியையும் பாா்வையிட்டு ஆய்வு செய்தனா்.

இதேபோல, மாவட்டத்தில் உள்ள 4 நகராட்சிகள், 42 பேரூராட்சிகளிலும், அந்தந்த நகராட்சிகள் மற்றும் பேரூராட்சிகளில் உள்ள வாக்குப் பெட்டி இருப்பறையில் இருந்து வாக்குப் பதிவு இயந்திரங்கள் வாக்கு மையங்களுக்கு எடுத்துச் செல்லப்பட்டன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.