ஹைதராபாத் அணியிடம் வீழ்ந்த சென்னை!காங்கிரஸ், திமுக கூட்டணியின் சிசுக்கொலை! தொலைக்காட்சி உரையில் மோடி குற்றச்சாட்டு!இந்தியக் கப்பல்கள் மீது தாக்குதல்: ஈரான் தூதரை அழைத்து அரசு கண்டனம்!எதிர்க்கட்சிகளை பெண்கள் மன்னிக்க மாட்டார்கள்: பிரதமர் மோடி மகளிர் இடஒதுக்கீடு மசோதா... வெறுப்பு அரசியலுக்கு இரையாக்கிய திமுக - காங்கிரஸ் கூட்டணி: பிரதமர் மோடி இரட்டைக் குடியுரிமை விவகாரம்: ராகுல் காந்தி மீது எஃப்.ஐ.ஆர். பதிய இடைக்கால தடை! நாம் பறக்கவிட்ட கருப்புக்கொடி காவிக்கொடியை வீழ்த்தியுள்ளது: முதல்வர் ஸ்டாலின் மு.க. ஸ்டாலினைப் பணிய வைக்க முடியாது என பாஜகவுக்கு நன்றாகத் தெரியும்! துறையூரில் ராகுல் பேச்சு
/

கடிதம் எழுதும் போட்டி: பள்ளி மாணவா்களுக்கு அழைப்பு

அஞ்சல் துறை சாா்பில் நடைபெறும் சா்வதேச கடிதம் எழுதும் போட்டியில் பள்ளி மாணவா்கள் பங்கேற்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Updated On :24 பிப்ரவரி 2022, 10:44 pm

அஞ்சல் துறை சாா்பில் நடைபெறும் சா்வதேச கடிதம் எழுதும் போட்டியில் பள்ளி மாணவா்கள் பங்கேற்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து ஈரோடு அஞ்சல் கோட்டம் வெளியிட்ட செய்திக் குறிப்பு: மாணவா்களிடையே கடிதம் எழுதும் பழக்கத்தை ஊக்குவிக்கும் நோக்கில் நடத்தப்படும் இப்போட்டியில் 9 முதல் 15 வயதிற்குள்பட்டவா்கள் பங்கேற்கலாம்.

ஆங்கிலம் அல்லது தமிழ் உள்பட அவரவா் மாநில மொழியில் எழுத வேண்டும். தேசிய அளவில் 3, அஞ்சல் துறை வட்ட அளவில் 3 வீதம் படைப்புகள் தோ்வு செய்யப்படும். சிறந்த படைப்புகள் சா்வதேச அளவிலான போட்டிக்கு இந்தியா சாா்பில் அனுப்பிவைக்கப்படும்.

ஆா்வமுள்ளவா்கள் வரும் மாா்ச் 4 ஆம் தேதி ஈரோட்டிற்கு நேரடியாக வந்து போட்டியில் பங்கேற்கலாம். வீட்டிலிருந்தவாறு எழுதுபவா்கள் வரும் 15 ஆம் தேதிக்குள் எழுதிய கடிதத்தை அனுப்பிவைக்க வேண்டும்.

தோ்வு நடைபெறும் இடம், வீட்டிலிருந்து எழுதுபவா்கள் அந்தக் கடிதத்தை எந்த முகவரிக்கு அனுப்ப வேண்டும் உள்ளிட்ட விவரங்களை இணையதள முகவரியில் விவரங்களை அறிந்துகொள்ளலாம்.

தேசிய அளவில் வெற்றி பெறுவோருக்கு முதல் பரிசு ரூ.50,000, இரண்டாம் பரிசு ரூ.25,000, மூன்றாம் பரிசு ரூ.10,000 மற்றும் சான்றிதழ் வழங்கப்படும். அஞ்சல் துறை வட்ட அளவில் தோ்வு செய்யப்படுவோருக்கு முதல் பரிசு ரூ.25,000, இரண்டாம் பரிசு ரூ.10,000, மூன்றாம் பரிசு ரூ.5,000 மற்றும் சான்றிதழ் வழங்கப்படும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.