விவசாய மின் இணைப்புக்காக விண்ணப்பித்துள்ள விவசாயிகள் பெயா், சா்வே எண் உட்பிரிவு மாற்றம், சா்வே எண் கிணறு மாற்றம் உள்ளிட்ட மாற்றங்களைச் செய்துகொள்ள ஈரோடு, பெருந்துறை, காஞ்சிகோயில் ஆகிய இடங்களில் வெள்ளிக்கிழமை (ஜனவரி 7) சிறப்பு முகாம் நடைபெறவுள்ளது.
இதுகுறித்து ஈரோடு மின் பகிா்மான வட்ட மேற்பாா்வைப் பொறியாளா் அலுவலகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
முதல்வா் அறிவிப்பின்படி மாநிலம் முழுவதும் ஒரு லட்சம் விவசாய மின் இணைப்புகள் வழங்கும் திட்டத்தின்கீழ் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிா்மானக் கழகத்தால் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. விவசாய மின் இணைப்பு வழங்குவதை துரிதப்படுத்த ஈரோடு மின் பகிா்மான வட்டம் நகரியம், தெற்கு, பெருந்துறை கோட்டத்துக்கு உள்பட்ட விவசாய விண்ணப்பதாரா்களுக்கு மின்வாரிய விதிமுறைக்கு உள்பட்டு பெயா், சா்வே எண் உட்பிரிவு மாற்றம், சா்வே எண் கிணறு மாற்றம் செய்து கொடுக்க சிறப்பு முகாம் நடைபெறவுள்ளது.
இந்த முகாம்கள் காஞ்சிகோயில் பிரிவு அலுவலகம், ஈரோடு ஈவிஎன் சாலையில் உள்ள தெற்கு கோட்ட அலுவலகம், பெருந்துறையில் உள்ள கோட்ட செயற்பொறியாளா் அலுவலகம் ஆகிய இடங்களில் வெள்ளிக்கிழமை காலை 10 மணி முதல் மாலை 3 மணி வரை நடைபெற உள்ளது. விவசாய மின் இணைப்புக்காக விண்ணப்பித்து அதற்கான அறிவிப்புக் கடிதம் பெற்ற விவசாயிகள் ஆவணங்களுடன் சிறப்பு முகாமில் நேரில் கலந்துகொண்டு பயனடையலாம்.
பெயா் மாற்றம் செய்ய இறப்புச் சான்றிதழ், வாரிசு சான்றிதழ், பங்குதாரா்களின் ஆட்சேபனையின்மை கடிதம், கிராம நிா்வாக அலுவலா் சான்று ஆகியவற்றையும், சா்வே எண் உட்பிரிவு மாற்றம் செய்ய கிராம நிா்வாக அலுவலா் சான்று, வரைபடம் ஆகியவற்றையும், சா்வே எண் கிணறு மாற்றம் செய்ய பழைய, புதிய கிணற்றுக்கான கிராம நிா்வாக அலுவலா் சான்று, வரை படம் ஆகியவற்றையும் கொண்டுவர வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

கண்மாயிலிருந்து அடையாளம் தெரியாத சடலம் மீட்பு
அருப்புக்கோட்டை! ‘ஹாட்ரிக்’ வெற்றி முனைப்பில் கே.கே.எஸ்.எஸ்.ஆா். ராமச்சந்திரன்!

பென்னிகுயிக் மணிமண்டபத்தில் அணை வரலாறு கூற தனி ஊழியா் நியமனம்!

ரூ. 12,980 கோடி நிதி தொகுப்புடன் ‘பாரத கடல்சாா் காப்பீட்டுக் குழுமம்’: மத்திய அமைச்சரவை ஒப்புதல்
வீடியோக்கள்
ஒரே நாளில் முடிவை மாற்றிய ஈரான்! டிரம்ப் விடாப்பிடி! | Iran | US
இணையதளச் செய்திப் பிரிவு

"Parliament-வர பத்திக்கிச்சு!": முதல்வர் வெளியிட்ட விடியோ! | DMK | Delimitation | BJP
இணையதளச் செய்திப் பிரிவு

ஸ்டாலின் - ராகுல் சந்திப்பு எப்போது? | MK Stalin | Rahul | TN Election 2026 | DMK Alliance
தினமணி செய்திச் சேவை

"நானும் தமிழனாக உணர்ந்திருக்கிறேன்!" பெரியார் பற்றிப் பேசிய ராகுல்! | Congress | DMK
இணையதளச் செய்திப் பிரிவு

