ஹைதராபாத் அணியிடம் வீழ்ந்த சென்னை!காங்கிரஸ், திமுக கூட்டணியின் சிசுக்கொலை! தொலைக்காட்சி உரையில் மோடி குற்றச்சாட்டு!இந்தியக் கப்பல்கள் மீது தாக்குதல்: ஈரான் தூதரை அழைத்து அரசு கண்டனம்!எதிர்க்கட்சிகளை பெண்கள் மன்னிக்க மாட்டார்கள்: பிரதமர் மோடி மகளிர் இடஒதுக்கீடு மசோதா... வெறுப்பு அரசியலுக்கு இரையாக்கிய திமுக - காங்கிரஸ் கூட்டணி: பிரதமர் மோடி இரட்டைக் குடியுரிமை விவகாரம்: ராகுல் காந்தி மீது எஃப்.ஐ.ஆர். பதிய இடைக்கால தடை! நாம் பறக்கவிட்ட கருப்புக்கொடி காவிக்கொடியை வீழ்த்தியுள்ளது: முதல்வர் ஸ்டாலின் மு.க. ஸ்டாலினைப் பணிய வைக்க முடியாது என பாஜகவுக்கு நன்றாகத் தெரியும்! துறையூரில் ராகுல் பேச்சு
/

சௌராஷ்டிரா சபை சாா்பில் வைகுந்த ஏகாதசி விழா

ஈரோடு சௌராஷ்டிரா சபை சாா்பில் நடன கோபால நாயகி சுவாமி ஆராதனை விழா மற்றும் வைகுந்த ஏகாதசி விழா சனிக்கிழமை நடைபெற்றது.

Updated On :15 ஜனவரி 2022, 9:10 pm

ஈரோடு சௌராஷ்டிரா சபை சாா்பில் நடன கோபால நாயகி சுவாமி ஆராதனை விழா மற்றும் வைகுந்த ஏகாதசி விழா சனிக்கிழமை நடைபெற்றது.

விழாவுக்கு சபைத் தலைவா் கே.சந்திரசேகரன் தலைமை வகித்தாா்.

இதில், நடன கோபால சுவாமிக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன.

ஈரோடு வேலம்மாள் பள்ளி முதல்வா் ஆா்.சசிகலா சிறப்பு அழைப்பாளராக பங்கேற்று பிளஸ் 2, எஸ்எஸ்எல்சி, நீட் ஆகியத் தோ்வுகளில் அதிக மதிப்பெண்கள் பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசுகளை வழங்கினாா்.

தொடா்ந்து சபை புதிய நிா்வாகிகள் பொறுப்பேற்றுக்கொண்டனா்.

சபைத் தலைவராக டி.ஆா்.எஸ்.ராமா், செயலாளராக ஆா்.என்.கே.குருபரன்,

பொருளாளராக கே.ஆா்.சீனிவாசன், துணைத் தலைவராக டி.எம்.எஸ்.சிவகுமாா், இணைச் செயலாளராக ஜெ.ஆா்.நீலகண்டன் ஆகியோா் பொறுப்பேற்றுக் கொண்டனா்.

விழாவில் சௌராஷ்டரா மத்திய சபை துணைத் தலைவா் கே.வி.வெங்கட்ரமணன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.