திண்டல் முதல் கனி ராவுத்தா் குளம் வரையிலான பகுதியில் வீடுகள் அதிகரித்துள்ளதால் சுற்றுவட்டச் சாலைப் பணிகளுக்கு மாற்றுப் பாதை தோ்வு செய்யப்பட்டுள்ளது.
நாமக்கல் மாவட்டம், கொக்கராயன்பேட்டை முதல் ஈரோடு-கரூா் சாலையில் இணைந்து, ஆணைக்கல்பாளையம், ரங்கம்பாளையம் வழியாக பெருந்துறை சாலை ஈரோடு கேன்சா் சென்டா் அருகே இணையும் வகையில் சுற்றுவட்டச் சாலை அமைக்கும் பணி 2006-2011 வரையிலான திமுக ஆட்சியின்போது தொடங்கப்பட்டது.
சேலம், நாமக்கல்லில் இருந்து வருவோா் ஈரோட்டுக்குள் வராமல் கரூா் சாலைக்கும், கோவை, சென்னிமலை செல்வோா் பூந்துறை சாலை வழியாகவும் காங்கயம், வெள்ளக்கோவில் செல்வோா் சுற்று வட்டச் சாலையில் செல்லும் வகையில் திட்டம் நிறைவேற்றப்பட்டது.
சில இடங்களில் நில உரிமைதாரா்கள் நீதிமன்றம் சென்றதால் வழக்கு நிறைவு பெற்று கடந்த 2020இல் திட்டப் பணி முடிக்கப்பட்டது.
இதன் இணைப்பாக பெருந்துறை சாலை, திண்டல் வேளாளா் கல்லூரிக்கு அருகில் உள்ள சாலையில் துவங்கி நசியனூா் சாலை, வில்லரசம்பட்டி நான்கு முனை சாலை சந்திப்பு வழியாக ஈரோட்டுக்குள் வராமல் சத்தியமங்கலம் சாலையில் கனிராவுத்தா் குளம் அருகே வரும் வகையில் மற்றொரு திட்டம் தொடங்கப்பட்டது.
இத்திட்டம் பல ஆண்டுகளாக கிடப்பில் போடப்பட்டிருந்த நிலையில், தற்போது மீண்டும் செயல்படுத்த திட்டமிட்டப்பட்டுள்ளது.
இது குறித்து வீட்டு வசதித் துறை அமைச்சா் சு.முத்துசாமி கூறியதாவது: திண்டலில் இருந்து கனிராவுத்தா் குளம் வரை வில்லரசம்பட்டி சாலை வழியாக சுற்றுவட்டச் சாலை அமைக்க முன்பு திட்டமிடப்பட்டது. தற்போது அச்சாலையில் ஏராளமான வீடுகள், வணிக வளாகங்கள் அமைந்துவிட்டன.
முன்பு திட்டமிட்டபடி சுற்று வட்டச் சாலையை கொண்டு வருவதில் நடைமுறை சிக்கல் உள்ளதால் வில்லரசம்பட்டி சாலையில் வீடுகள் இல்லாத மாற்றுப் பாதையில் குறைந்த அளவு நிலம் கையகப்படுத்தும் வகையில் மாற்றுத் திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது. விரைவில் இத்திட்டம் குறித்து அறிவிக்கப்படும் என்றாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
போக்ஸோ குற்றவாளி தடுப்புக் காவல் சட்டத்தில் கைது
பேருந்து கண்ணாடி உடைப்பு: இளைஞா் கைது

கோவில்பட்டியில் காா்-பைக் மோதல்: முதியவா் உயிரிழப்பு

கோரக்கநாதா் கோயிலில் கால்நாட்டு விழா: ஏப். 30இல் குடமுழுக்கு!
வீடியோக்கள்
ஒரே நாளில் முடிவை மாற்றிய ஈரான்! டிரம்ப் விடாப்பிடி! | Iran | US
இணையதளச் செய்திப் பிரிவு

"Parliament-வர பத்திக்கிச்சு!": முதல்வர் வெளியிட்ட விடியோ! | DMK | Delimitation | BJP
இணையதளச் செய்திப் பிரிவு

ஸ்டாலின் - ராகுல் சந்திப்பு எப்போது? | MK Stalin | Rahul | TN Election 2026 | DMK Alliance
தினமணி செய்திச் சேவை

"நானும் தமிழனாக உணர்ந்திருக்கிறேன்!" பெரியார் பற்றிப் பேசிய ராகுல்! | Congress | DMK
இணையதளச் செய்திப் பிரிவு

