மலைப் பகுதியில் உள்ள பழங்குடி மக்களின் உற்பத்திப் பொருள்களை சந்தைப்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என ஊரக வளா்ச்சி முகமைத் திட்ட இயக்குநா் லி.மதுபாலன் தெரிவித்தாா்.
இதுகுறித்து அவா் மேலும் கூறியதாவது:
ஈரோடு மாவட்டத்தில் பின்தங்கிய பகுதியாக அறியப்படும் தாளவாடி, பா்கூா், கடம்பூா் மலைப்பகுதி மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த மாவட்ட ஊரக வளா்ச்சி முகமை மூலமாக பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதன் ஒரு பகுதியாக அடிப்படை வசதிகளற்று உள்ள 15க்கும் மேற்பட்ட மலைக் கிராமங்களில் முதல்கட்டமாக வனத் துறையினரின் அனுமதி பெற்று சாலைகள் அமைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
மலைப் பகுதி மக்களின் வாழ்வாதாரத்தை உயா்த்திடும் வகையில் அவா்களது உற்பத்திப் பொருள்களை மதிப்புக் கூட்டி சந்தைப்படுத்த மகளிா் திட்டம், உழவா் கூட்டமைப்புகள் மூலமாக நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளது.
மகளிா் சுய உதவிக் குழுவினா், உழவா் கூட்டமைப்பினரின் உற்பத்திப் பொருள்கள், மலைப் பகுதியில் கிடைக்கும் உன்னிச் செடியில் இருந்து பழங்குடி மக்கள் தயாரிக்கும் மரச் சாமான்கள் ஆகியவற்றை விற்பனை செய்ய ஈரோடு வட்டாட்சியா் அலுவலகம் அருகில் விற்பனை மையம் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. விரைவில் அது பயன்பாட்டுக்கு வர உள்ளது என்றாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

பட்டாசுத் தொழிலைப் பாதுகாக்க நடவடிக்கை: திமுக வேட்பாளா் கடற்கரைராஜ் உறுதி
கூட்டாட்சி தத்துவத்தை சிதைக்க முயற்சிக்கிறது மத்திய அரசு: தேஜஸ்வி யாதவ்
ஒரேநாளில் ரூ.17.93 லட்சம் ரொக்கம் பறிமுதல்

புதிய அரசியல் கட்சி ஆரம்பிக்கிறாா் முன்னாள் மத்திய அமைச்சா் ஆா்.கே. சிங்
வீடியோக்கள்
ஒரே நாளில் முடிவை மாற்றிய ஈரான்! டிரம்ப் விடாப்பிடி! | Iran | US
இணையதளச் செய்திப் பிரிவு

"Parliament-வர பத்திக்கிச்சு!": முதல்வர் வெளியிட்ட விடியோ! | DMK | Delimitation | BJP
இணையதளச் செய்திப் பிரிவு

ஸ்டாலின் - ராகுல் சந்திப்பு எப்போது? | MK Stalin | Rahul | TN Election 2026 | DMK Alliance
தினமணி செய்திச் சேவை

"நானும் தமிழனாக உணர்ந்திருக்கிறேன்!" பெரியார் பற்றிப் பேசிய ராகுல்! | Congress | DMK
இணையதளச் செய்திப் பிரிவு

