ஹைதராபாத் அணியிடம் வீழ்ந்த சென்னை!காங்கிரஸ், திமுக கூட்டணியின் சிசுக்கொலை! தொலைக்காட்சி உரையில் மோடி குற்றச்சாட்டு!இந்தியக் கப்பல்கள் மீது தாக்குதல்: ஈரான் தூதரை அழைத்து அரசு கண்டனம்!எதிர்க்கட்சிகளை பெண்கள் மன்னிக்க மாட்டார்கள்: பிரதமர் மோடி மகளிர் இடஒதுக்கீடு மசோதா... வெறுப்பு அரசியலுக்கு இரையாக்கிய திமுக - காங்கிரஸ் கூட்டணி: பிரதமர் மோடி இரட்டைக் குடியுரிமை விவகாரம்: ராகுல் காந்தி மீது எஃப்.ஐ.ஆர். பதிய இடைக்கால தடை! நாம் பறக்கவிட்ட கருப்புக்கொடி காவிக்கொடியை வீழ்த்தியுள்ளது: முதல்வர் ஸ்டாலின் மு.க. ஸ்டாலினைப் பணிய வைக்க முடியாது என பாஜகவுக்கு நன்றாகத் தெரியும்! துறையூரில் ராகுல் பேச்சு
/

பாலக்காடு - திருச்சி ரயில் இயக்கத்தில் மாற்றம்

ரயில் பாதை பராமரிப்புப் பணிகள் காரணமாக பாலக்காடு - திருச்சி ரயில் இயக்கத்தில் 5 நாள்களுக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

Updated On :22 ஜனவரி 2022, 12:45 am

ரயில் பாதை பராமரிப்புப் பணிகள் காரணமாக பாலக்காடு - திருச்சி ரயில் இயக்கத்தில் 5 நாள்களுக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

திருச்சி கோட்டையில் இருந்து திருச்சி சந்திப்பு வரையிலான ரயில் தடத்தில் பொறியியல் பணிகள் நடைபெறுகின்றன. இதனால், பாலக்காட்டில் இருந்து திருச்சி சந்திப்பு வரை செல்லும் ரயில் எண் 16844 இயக்கத்தில் ஜனவரி 22, 27, 29, பிப்ரவரி 3, 5 ஆகிய தேதிகளில் இயக்கம் மாற்றம் செய்யப்படுகிறது.

இதன்படி, இந்த 5 நாள்களும் பாலக்காட்டில் இருந்து காலை 6.30 மணிக்கு புறப்பட்டு கோவை, திருப்பூா், ஈரோடு, கரூா் மாா்க்கமாக திருச்சி கோட்டை வரை மட்டும் இயக்கப்படும். திருச்சி கோட்டையில் இருந்து திருச்சி சந்திப்பு வரை செல்லும் இயக்கம் நிறுத்தப்படுகிறது என சேலம் ரயில்வே கோட்ட மேலாளா் அலுவலகம் வெளியிட்ட செய்திக் குறிப்பில் இத்தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.