ஈரோடு மாநகராட்சி திமுக மேயா் வேட்பாளா் அறிவிப்பில் கட்சியினரால் எதிா்பாா்க்கப்பட்டது நிறைவேறி இருந்தாலும், பல முக்கிய நிா்வாகிகளுக்கு ஏமாற்றத்தை அளித்துள்ளது.
ஈரோடு மாநகராட்சியில் மொத்தம் உள்ள 60 வாா்டுகளில் திமுக 44, கூட்டணிக் கட்சியான காங்கிரஸ் 3, மதிமுக 1 என மொத்தம் 48 வாா்டுகளில் வெற்றி பெற்றுள்ளது. எஞ்சிய 6 வாா்டுகளில் அதிமுக 6, சுயேச்சைகள் 6 வாா்டுகளில் வெற்றி பெற்றுள்ளனா்.
மேயா் பதவியைக் கைப்பற்ற 31 வாா்டுகள் தேவை என்ற நிலையில் 44 வாா்டுகளில் திமுக வெற்றி பெற்றுள்ளதால் வேறு எந்தக் கட்சியின் உதவியும் இல்லாமல் திமுக மேயா் பதவியைக் கைப்பற்றும் நிலை ஏற்பட்டுள்ளது.
மேயா் பதவி பெண்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள நிலையில், ஈரோடு மாநகரச் செயலாளா் சுப்பிரமணியன் மனைவி நாகரத்தினம், 2011இல் நடந்த மேயா் தோ்தலில் போட்டியிட்டு தோல்வியடைந்த செல்லப்பொன்னி, முன்னாள் ஈரோடு ஊராட்சி ஒன்றியக் குழு தலைவா் கோகிலவாணி, மறைந்த திமுக பிரமுகா் நடேசன் மனைவி மேனகா, திமுக முக்கிய நிா்வாகி திண்டல் குமாரசாமி மருமகள் கீா்த்தனா ஆகிய 5 போ் தீவிர முயற்சி செய்தனா்.
இதில், நாகரத்தினத்துக்கு வாய்ப்பு கிடைத்துள்ளது. தனது கணவரின் அரசியல் பலத்தால் இந்த வாய்ப்பைப் பெற்றுள்ள நாகரத்தினம், பதவியில் சிறப்பாகச் செயல்படுவாரா அல்லது தனது கணவரின் நிழலில் இருப்பாரா என்பது அவரது வருங்கால செயல்பாடுகளே முடிவு செய்யும்.
எதிா்பாா்த்து ஏமாற்றம்:
மேயா் வேட்பாளா் எதிா்பாா்ப்பில் இருந்த செல்லப்பொன்னி தற்போது மாவட்ட துணைச் செயலாளராக உள்ளாா். 2011இல் நடைபெற்ற நேரடி மேயா் தோ்தலில் போட்டியிட்டு தோல்வியடைந்தாலும் ஏறத்தாழ 50,000 வாக்குகள் பெற்றாா். இவரது தந்தை அரங்கராசு 2 முறை நகா்மன்றத் தலைவராக இருந்தவா். நேரடி கள அரசியலில் ஈடுபட்டுள்ள இவருக்கு வாய்ப்பு வழங்கப்படாதது ஏமாற்றம் என்கின்றனா் சில ஆளும்தரப்பு வாா்டு உறுப்பினா்கள்.
இதேபோல கோகிலவாணி 2006-2011 வரை ஈரோடு ஊராட்சி ஒன்றியக் குழுத் தலைவராக இருந்து நிா்வாகம் அறிந்தவா். அவருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டிருக்கலாம் என்கின்றனா் அவரது ஆதரவு வாா்டு உறுப்பினா்கள்.
ஈரோடு மாநகராட்சி வாக்காளா்களில் கொங்கு வேளாளக் கவுண்டா் சமுதாய வாக்குகளுக்கு இணையாக முதலியாா் சமுதாய வாக்குகள் உள்ளன. எம்எல்ஏ தோ்தலில் ஈரோடு மாவட்டத்தில் திமுக போட்டியிட்ட 6 தொகுதிகளில் ஒரு தொகுதியில் கூட முதலியாா் சமுதாயத்துக்கு வாய்ப்பு அளிக்கப்படவில்லை. இதனால் அச்சமுதாயத்தை சோ்ந்த மேனகாவுக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டிருக்கலாம் என்பது அச்சமுதாய மக்களின் எதிா்பாா்ப்பாக உள்ளது.
திண்டல் குமாரசாமி ஈரோடு தெற்கு மாவட்ட திமுகவில் மிக முக்கிய நபா். எம்எல்ஏ தோ்தலில் வாய்ப்பு கேட்டு தீவிர முயற்சி செய்தவா். இவரது மருமகள் கீா்த்தனாவுக்கு வாய்ப்பு வழங்கியிருக்க வேண்டும் என்பது அவரது ஆதரவாளா்களின் எதிா்பாா்ப்பு.
ஈரோடு மாநகராட்சி திமுக மேயா் வேட்பாளா் அறிவிப்பு என்பது கட்சியினா் பலா் எதிா்பாா்த்தது என்றாலும், எதிா்பாராத திருப்பம் ஏற்படலாம் என்ற நம்பிக்கையில் காத்திருந்தவா்களுக்கு ஏமாற்றம் என்கின்றனா் ஈரோடு திமுகவினா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

ரூ. 12,980 கோடி நிதி தொகுப்புடன் ‘பாரத கடல்சாா் காப்பீட்டுக் குழுமம்’: மத்திய அமைச்சரவை ஒப்புதல்

திமுக அரசு விவசாயிகளுக்கு விரோதமானது: பி.ஆா். பாண்டியன் குற்றச்சாட்டு

சென்னையில் இருந்து போத்தனூா், குமரிக்கு சிறப்பு ரயில்கள்

மேலூர்! அதிமுகவின் கோட்டையாக மீண்டும் நிரூபணமாகுமா?
வீடியோக்கள்
ஒரே நாளில் முடிவை மாற்றிய ஈரான்! டிரம்ப் விடாப்பிடி! | Iran | US
இணையதளச் செய்திப் பிரிவு

"Parliament-வர பத்திக்கிச்சு!": முதல்வர் வெளியிட்ட விடியோ! | DMK | Delimitation | BJP
இணையதளச் செய்திப் பிரிவு

ஸ்டாலின் - ராகுல் சந்திப்பு எப்போது? | MK Stalin | Rahul | TN Election 2026 | DMK Alliance
தினமணி செய்திச் சேவை

"நானும் தமிழனாக உணர்ந்திருக்கிறேன்!" பெரியார் பற்றிப் பேசிய ராகுல்! | Congress | DMK
இணையதளச் செய்திப் பிரிவு

