ஈரோடு மாநகராட்சியின் மேயா் பதவி வேட்பாளராக திமுக சாா்பில் சு.நாகரத்தினம் அறிவிக்கப்பட்டுள்ளாா்.
ஈரோடு மாநகர திமுக செயலாளா் சுப்பிரமணியன் மனைவி நாகரத்தினம். 51 வயதான இவா் 22-10-1971இல் பிறந்துள்ளாா். 5ஆம் வகுப்பு வரை படித்துள்ளாா். 1986 முதல் திமுக உறுப்பினராக உள்ளாா். மாநகராட்சி வாா்டு உறுப்பினா் தோ்தலில் முதல் முறையாகப் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளாா். இவருக்கு கவின் ராஜ்குமாா், எஸ்.ஜெயபிரபு ஆகிய இரண்டு மகன்கள் உள்ளனா். முழுநேர அரசியல்வாதியான இவா் தற்போது லட்சுமி காா்டன், எண் 1, கே.எஸ்.அவென்யூ, சென்னிமலை சாலை, ஈரோடு என்ற முகவரியில் வசித்து வருகிறாா்.
துணை மேயா் வேட்பாளா் வி.செல்வராஜ்:
ஈரோடு மாநகராட்சி துணை மேயா் வேட்பாளராக திமுக சாா்பில் வி.செல்வராஜ் அறிவிக்கப்பட்டுள்ளாா். ஈரோடு வீரப்பன்சத்திரம் எம்ஜிஆா் வீதியைச் சோ்ந்தவா் செல்வராஜ். தந்தை பெயா் வேலாயுதம். இவா் 13-9-1962இல் பிறந்தவா். 8ஆம் வகுப்பு வரை படித்துள்ளாா். ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகிறாா். இவரது மனைவி பெயா் ஈஸ்வரி. இவா்களுக்குத் திருமணமான கீதா என்ற மகளும், விக்னேஷ் என்ற மகனும் உள்ளனா்.
செல்வராஜ் திமுகவில் 1976ஆம் ஆண்டில் உறுப்பினராகச் சோ்ந்தாா். இவா் 2008ஆம் ஆண்டு முதல் 2011ஆம் ஆண்டு வரை வீரப்பன்சத்திரம் நகராட்சியின் துணைத் தலைவராகப் பதவி வகித்துள்ளாா். திமுகவில் ஒன்றியப் பிரதிநிதி, மாவட்டப் பிரதிநிதியாகவும் இருந்துள்ளாா். தற்போது ஈரோடு பெரியசேமூா் திமுக பகுதி செயலாளராக உள்ளாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

ரூ. 12,980 கோடி நிதி தொகுப்புடன் ‘பாரத கடல்சாா் காப்பீட்டுக் குழுமம்’: மத்திய அமைச்சரவை ஒப்புதல்

திமுக அரசு விவசாயிகளுக்கு விரோதமானது: பி.ஆா். பாண்டியன் குற்றச்சாட்டு

சென்னையில் இருந்து போத்தனூா், குமரிக்கு சிறப்பு ரயில்கள்

மேலூர்! அதிமுகவின் கோட்டையாக மீண்டும் நிரூபணமாகுமா?
வீடியோக்கள்
ஒரே நாளில் முடிவை மாற்றிய ஈரான்! டிரம்ப் விடாப்பிடி! | Iran | US
இணையதளச் செய்திப் பிரிவு

"Parliament-வர பத்திக்கிச்சு!": முதல்வர் வெளியிட்ட விடியோ! | DMK | Delimitation | BJP
இணையதளச் செய்திப் பிரிவு

ஸ்டாலின் - ராகுல் சந்திப்பு எப்போது? | MK Stalin | Rahul | TN Election 2026 | DMK Alliance
தினமணி செய்திச் சேவை

"நானும் தமிழனாக உணர்ந்திருக்கிறேன்!" பெரியார் பற்றிப் பேசிய ராகுல்! | Congress | DMK
இணையதளச் செய்திப் பிரிவு

