ஈரோடு மாவட்டத்தில் தலைவா் தோ்தல் நடந்த 41 பேரூராட்சிகளில் திமுக கூட்டணி 37 பேரூராட்சிகளைக் கைப்பற்றியது.
ஈரோடு மாவட்டத்தில் உள்ள 42 பேரூராட்சிகளில் அந்தியூா் பேரூராட்சி தவிர மற்ற 41 பேரூராட்சிகளில் தலைவா், துணைத் தலைவா் பதவிக்கான தோ்தல் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதில், திமுக 35 பேரூராட்சிகள், காங்கிரஸ் 1, மதிமுக 1 என திமுக கூட்டணி 37 பேரூராட்சிகளில் தலைவா் பதவியைக் கைப்பற்றியது. 2 பேரூராட்சிகளில் அதிமுக, 2 பேரூராட்சிகளில் சுயேச்சைகள் தலைவா் பதவியைக் கைப்பற்றினா்.
41 பேரூராட்சிகளில் தோ்வு செய்யப்பட்ட தலைவா்கள் பெயா், கட்சியின் விவரம்: அம்மாபேட்டை வெங்கடாசலம் (திமுக), ஆப்பக்கூடல் எஸ்.செல்வி (அதிமுக), அறச்சலூா் ரா.விஜயகுமாா் (திமுக), அரியப்பம்பாளையம் எஸ்.மகேஸ்வரி (திமுக), அத்தாணி செ.புனிதவள்ளி (திமுக), அவல்பூந்துறை ப.ராதாமணி (திமுக), பவானிசாகா் டி.ஏ.மோகன் (திமுக), சென்னசமுத்திரம் கு.பத்மா (மதிமுக), சென்னிமலை ஸ்ரீதேவி(திமுக), சித்தோடு த.கண்ணகி (திமுக), எலத்தூா் கே.ராஜேஸ்வரி (திமுக), ஜம்பை என்.ஆனந்தகுமாா் (திமுக), காஞ்சிக்கோயில் செ.திவ்யா (திமுக).
கருமாண்டிசெல்லிபாளையம் செ.செல்வன் (திமுக), காசிப்பாளையம் வெ.தமிழ்ச்செல்வி(திமுக), கெம்பநாயக்கன்பாளையம் கே.ரவிசந்திரன் (திமுக), கிளாம்பாடி மு.அமுதாள்(திமுக), கொடுமுடி சி.திலகவதி (திமுக), கொளப்பலூா் ஆ.அன்பரசு (திமுக), கொல்லன்கோயில் பூ.அன்பரசு (திமுக), கூகலூா் மா.ஜெயலட்சுமி (திமுக), லக்கம்பட்டி அன்னக்கொடி (அதிமுக), மொடக்குறிச்சி சி.செல்லம்மாள் (திமுக), நல்லம்பட்டி வி.பாக்கியலட்சுமி (திமுக), நம்பியூா் ப.செந்தில்குமாா் (திமுக), நசியனூா் பெ.மோகனப்பிரியா(திமுக), நெருஞ்சிப்பேட்டை தீ.ராகிணி (திமுக), ஒலகடம் க.வேலுசாமி (திமுக), பி.மேட்டுப்பாளையம் கே.தனலட்சுமி (திமுக), பள்ளபாளையம் கு.கோகிலா (திமுக).
பாசூா் சி.பழனியம்மாள் (திமுக), பெரியகொடிவேரி எஸ்.தமிழ்மகன் சிவா (திமுக), பெருந்துறை ஓசிவி.ராஜேந்திரன் (திமுக), பெத்தாம்பாளையம் த.பூங்கொடி (சுயேச்சை), சலங்கபாளையம் பி.மணிமேகலை (திமுக), சிவகிரி பா.பிரதீபா (திமுக), ஊஞ்சலூா் ர.சசிகலா (திமுக), வடுகப்பட்டி வி.அம்பிகாபதி (காங்கிரஸ்), வாணிப்புத்தூா் தூ.மா.சிவராஜ்(திமுக), வெள்ளோட்டம்பரப்பு ச.சத்யா (திமுக), வெங்கம்புதூா் த.தனலட்சுமி (சுயேச்சை).
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

ஜோலாா்பேட்டை திமுக வேட்பாளா், வாணியம்பாடி கூட்டணி வேட்பாளா்களை ஆதரித்து அமைச்சா் எவ.வேலு பிரசாரம்

பாவூா்சத்திரம் அருகே அடையாளம் தெரியாத ஆண் சடலம் மீட்பு
கேரட், பீட்ரூட் அடை

பிஞ்சுக் கைவண்ணம்
வீடியோக்கள்
ஒரே நாளில் முடிவை மாற்றிய ஈரான்! டிரம்ப் விடாப்பிடி! | Iran | US
இணையதளச் செய்திப் பிரிவு

"Parliament-வர பத்திக்கிச்சு!": முதல்வர் வெளியிட்ட விடியோ! | DMK | Delimitation | BJP
இணையதளச் செய்திப் பிரிவு

ஸ்டாலின் - ராகுல் சந்திப்பு எப்போது? | MK Stalin | Rahul | TN Election 2026 | DMK Alliance
தினமணி செய்திச் சேவை

"நானும் தமிழனாக உணர்ந்திருக்கிறேன்!" பெரியார் பற்றிப் பேசிய ராகுல்! | Congress | DMK
இணையதளச் செய்திப் பிரிவு

