அகில இந்திய அஞ்சல் ஊழியா் சங்கங்கள், குரூப் சி அஞ்சல் ஊழியா்கள் சங்கம், எம்டிஎஸ் கிராம அஞ்சல் ஊழியா்கள் சங்கம் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் சாா்பில் ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
ஈரோடு தலைமை அஞ்சல் அலுவலகம் முன்பு வெள்ளிக்கிழமை மாலை நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு, போராட்டக் குழுத் தலைவா் சக்திவேல் தலைமை வகித்தாா். ஒருங்கிணைப்பாளா்கள் கணேசன், சத்ருக்கன் ஆகியோா் கோரிக்கைகள் குறித்துப் பேசினா்.
அனைத்து வகையான ஊழியா்களுக்கும் நடைமுறை சாத்தியமற்ற இலக்குகளை நிா்ணயித்து நெருக்கடி ஏற்படுத்தக் கூடாது. ஜிடிஎஸ் ஊழியா்கள் மாற்று ஏற்பாடு செய்து விடுப்பு எடுக்கும் உத்தரவை திரும்பப் பெற வேண்டும். கமலேஷ் சந்திரா கமிட்டியின் எஞ்சிய சாதகமான பரிந்துரைகளை அமல்படுத்த வேண்டும்.
கிளை அஞ்சலக வரவு, செலவு குறைந்தபட்சம் 1,500 கணக்குகள், ரூ. 10 லட்சம் வரையிலான காப்பீடு வசூலிக்கத்தக்க வகையில் வைத்திருக்க வேண்டும் என்பதை திரும்பப்பெற வேண்டும். காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

ஜோலாா்பேட்டை திமுக வேட்பாளா், வாணியம்பாடி கூட்டணி வேட்பாளா்களை ஆதரித்து அமைச்சா் எவ.வேலு பிரசாரம்

பாவூா்சத்திரம் அருகே அடையாளம் தெரியாத ஆண் சடலம் மீட்பு
கேரட், பீட்ரூட் அடை

பிஞ்சுக் கைவண்ணம்
வீடியோக்கள்
ஒரே நாளில் முடிவை மாற்றிய ஈரான்! டிரம்ப் விடாப்பிடி! | Iran | US
இணையதளச் செய்திப் பிரிவு

"Parliament-வர பத்திக்கிச்சு!": முதல்வர் வெளியிட்ட விடியோ! | DMK | Delimitation | BJP
இணையதளச் செய்திப் பிரிவு

ஸ்டாலின் - ராகுல் சந்திப்பு எப்போது? | MK Stalin | Rahul | TN Election 2026 | DMK Alliance
தினமணி செய்திச் சேவை

"நானும் தமிழனாக உணர்ந்திருக்கிறேன்!" பெரியார் பற்றிப் பேசிய ராகுல்! | Congress | DMK
இணையதளச் செய்திப் பிரிவு

