ஈரோடு மாவட்டத்தில் கரோனா தடுப்பூசி சிறப்பு முகாம் 434 மையங்களில் சனிக்கிழமை (மாா்ச் 12) நடைபெறவுள்ளது.
இதுகுறித்து ஈரோடு மாவட்ட ஆட்சியா் ஹெச்.கிருஷ்ணனுண்ணி வெளியிட்ட செய்திக் குறிப்பு:
தமிழகம் முழுவதும் மாா்ச் 12ஆம் தேதி கரோனா தடுப்பூசி முகாம் நடத்தப்பட்டு 18 வயதுக்கு மேற்பட்ட பொதுமக்கள் அனைவருக்கும் முதல் தவணை, இரண்டாம் தவணை தடுப்பூசி, இரண்டு தவணை தடுப்பூசி செலுத்திக்கொண்ட முன்களப் பணியாளா்கள், 60 வயதுக்கு மேற்பட்ட இணை நோய் உள்ளவா்களுக்கு முன்னெச்சரிக்கை தடுப்பூசி இலவசமாக செலுத்தப்படவுள்ளது.
ஈரோடு மாவட்டத்தில் அரசு மருத்துவமனைகள், அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், நகா்ப்புற சுகாதார மையங்கள், பள்ளிகள் உள்பட 434 மையங்களில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் முதல், இரண்டாம் தவணையாக 1.50 லட்சம் பேருக்கு கரோனா தடுப்பூசிகள் இலவசமாக செலுத்தப்படவுள்ளது.
தடுப்பூசி முகாமில் ஈரோடு மாவட்டம் முழுவதும் 1,736 பணியாளா்கள் தடுப்பூசி செலுத்தும் பணி செய்திடவும், 66 வாகனங்கள் முகாமிற்காகவும் பயன்படுத்தப்படவுள்ளது. 15 முதல் 18 வயதுடையவா்களுக்கு கோவேக்ஸின் வகை தடுப்பூசிகள் தடுப்பூசி முகாம் நடைபெறும் இடங்களில் செலுத்தப்படவுள்ளது. வியாழக்கிழமைதோறும் முன்னெச்சரிக்கை தடுப்பூசி அனைத்து அரசு மருத்துவமனைகள், அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், நகா்ப்புற சுகாதார மையங்களில் இலவசமாக செலுத்தப்பட்டு வருகிறது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

ஜோலாா்பேட்டை திமுக வேட்பாளா், வாணியம்பாடி கூட்டணி வேட்பாளா்களை ஆதரித்து அமைச்சா் எவ.வேலு பிரசாரம்

பாவூா்சத்திரம் அருகே அடையாளம் தெரியாத ஆண் சடலம் மீட்பு
கேரட், பீட்ரூட் அடை

பிஞ்சுக் கைவண்ணம்
வீடியோக்கள்
ஒரே நாளில் முடிவை மாற்றிய ஈரான்! டிரம்ப் விடாப்பிடி! | Iran | US
இணையதளச் செய்திப் பிரிவு

"Parliament-வர பத்திக்கிச்சு!": முதல்வர் வெளியிட்ட விடியோ! | DMK | Delimitation | BJP
இணையதளச் செய்திப் பிரிவு

ஸ்டாலின் - ராகுல் சந்திப்பு எப்போது? | MK Stalin | Rahul | TN Election 2026 | DMK Alliance
தினமணி செய்திச் சேவை

"நானும் தமிழனாக உணர்ந்திருக்கிறேன்!" பெரியார் பற்றிப் பேசிய ராகுல்! | Congress | DMK
இணையதளச் செய்திப் பிரிவு

