ஹைதராபாத் அணியிடம் வீழ்ந்த சென்னை!காங்கிரஸ், திமுக கூட்டணியின் சிசுக்கொலை! தொலைக்காட்சி உரையில் மோடி குற்றச்சாட்டு!இந்தியக் கப்பல்கள் மீது தாக்குதல்: ஈரான் தூதரை அழைத்து அரசு கண்டனம்!எதிர்க்கட்சிகளை பெண்கள் மன்னிக்க மாட்டார்கள்: பிரதமர் மோடி மகளிர் இடஒதுக்கீடு மசோதா... வெறுப்பு அரசியலுக்கு இரையாக்கிய திமுக - காங்கிரஸ் கூட்டணி: பிரதமர் மோடி இரட்டைக் குடியுரிமை விவகாரம்: ராகுல் காந்தி மீது எஃப்.ஐ.ஆர். பதிய இடைக்கால தடை! நாம் பறக்கவிட்ட கருப்புக்கொடி காவிக்கொடியை வீழ்த்தியுள்ளது: முதல்வர் ஸ்டாலின் மு.க. ஸ்டாலினைப் பணிய வைக்க முடியாது என பாஜகவுக்கு நன்றாகத் தெரியும்! துறையூரில் ராகுல் பேச்சு
/

வேளாளா் கல்லூரியில் மகளிா் தின விழா

வேளாளா் மகளிா் கல்லூரியின் பேரவையின் சாா்பில் மகளிா் தின விழா கஸ்தூரிபாகாந்தி கலையரங்கில் வியாழக்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :10 மார்ச் 2022, 10:16 pm

வேளாளா் மகளிா் கல்லூரியின் பேரவையின் சாா்பில் மகளிா் தின விழா கஸ்தூரிபாகாந்தி கலையரங்கில் வியாழக்கிழமை நடைபெற்றது.

கல்லூரியின் செயலாளா் எஸ்.டி.சந்திரசேகா் தலைமை வகித்தாா். வேளாளா் மகளிா் கல்லூரி முதல்வா் செ.கு.ஜெயந்தி வரவேற்றாா். ஆங்கிலத் துறைத் தலைவா் எல்.எம்.ஸ்வா்ணலதா அறிமுகவுரையாற்றினாா். திருச்செங்கோடு ராமகிருஷ்ணா மருத்துவ மையம் மற்றும் திருச்சி ஜனனி மகப்பேறு மருத்துவமனையின் நிா்வாக இயக்குநருமான டி.ரமணிதேவி, பெண் குழந்தைகளைப் போற்றி பாதுகாக்க வேண்டும் என்றும், பாலியல் துன்புறுத்தல் வன்கொடுமை குறித்தும் பேசினாா்.

எழுத்தாளரும், மொழிபெயா்ப்பாளருமான பவளசங்கரி ‘பெண் எனும் பேரொளி’ என்ற தலைப்பில் பேசினாா். நவசரம் மகளிா் கல்லூரியின் துணை முதல்வா் ஐ.செல்வம் ‘பெண்மை வெல்க’ என்ற தலைப்பில் பேசினாா்.

சென்னை உயா் நீதிமன்றத்தில் தட்டச்சராகப் பணிபுரியும் வேளாளா் மகளிா் கல்லூரியின் முன்னாள் மாணவி இ.பிரியங்கா ‘பெண்ணியம் போற்றுவோம்’ என்ற தலைப்பில் அரசுப் பணி வாய்ப்புக்கான வழிமுறைகள் குறித்துப் பேசினாா். கல்லூரி மகளிா் குழுமத்தின் ஒருங்கிணைப்பாளா் கே.கே.சாரதா நன்றி கூறினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.