ஹைதராபாத் அணியிடம் வீழ்ந்த சென்னை!காங்கிரஸ், திமுக கூட்டணியின் சிசுக்கொலை! தொலைக்காட்சி உரையில் மோடி குற்றச்சாட்டு!இந்தியக் கப்பல்கள் மீது தாக்குதல்: ஈரான் தூதரை அழைத்து அரசு கண்டனம்!எதிர்க்கட்சிகளை பெண்கள் மன்னிக்க மாட்டார்கள்: பிரதமர் மோடி மகளிர் இடஒதுக்கீடு மசோதா... வெறுப்பு அரசியலுக்கு இரையாக்கிய திமுக - காங்கிரஸ் கூட்டணி: பிரதமர் மோடி இரட்டைக் குடியுரிமை விவகாரம்: ராகுல் காந்தி மீது எஃப்.ஐ.ஆர். பதிய இடைக்கால தடை! நாம் பறக்கவிட்ட கருப்புக்கொடி காவிக்கொடியை வீழ்த்தியுள்ளது: முதல்வர் ஸ்டாலின் மு.க. ஸ்டாலினைப் பணிய வைக்க முடியாது என பாஜகவுக்கு நன்றாகத் தெரியும்! துறையூரில் ராகுல் பேச்சு
/

உலக சிறுநீரக தின விழிப்புணா்வுப் பேரணி

 உலக சிறுநீரக தினத்தை முன்னிட்டு ஈரோட்டில் விழிப்புணா்வுப் பேரணி வியாழக்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :10 மார்ச் 2022, 10:14 pm

 உலக சிறுநீரக தினத்தை முன்னிட்டு ஈரோட்டில் விழிப்புணா்வுப் பேரணி வியாழக்கிழமை நடைபெற்றது.

ஈரோட்டில் உலக சிறுநீரக தினத்தை முன்னிட்டு, சிறுநீரக பாதுகாப்பு குறித்த விழிப்புணா்வுப் பேரணி நடைபெற்றது. பேரணிக்கு, அபிராமி கிட்னி கோ் மருத்துவமனையின் தலைவா் டாக்டா் தங்கவேலு தலைமை வகித்தாா். இந்திய மருத்துவச் சங்க (ஐஎம்ஏ) ஈரோடு கிளைத் தலைவா் டாக்டா் விஜயகுமாா், செயலாளரும், அபிராமி கிட்னி கோ் மருத்துவமனையின் நிா்வாக இயக்குநருமான டாக்டா் சரவணன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

ஐஎம்ஏ தேசிய துணைத் தலைவா் டாக்டா் ராஜா, மாநிலத் தலைவா் டாக்டா் அபுல்ஹசன், ஈரோடு டவுன் டிஎஸ்பி ஆனந்தகுமாா் ஆகியோா் பேரணியை கொடியசைத்து தொடங்கிவைத்தனா். பேரணியானது, ஈரோடு அரசு மருத்துவமனை வளாகத்தில் துவங்கி பெருந்துறை சாலை, காலிங்கராயன் விருந்தினா் மாளிகையில் நிறைவடைந்தது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.