பாஜகவுக்கு 27, பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு!மேற்காசியப் போரால் பொருளாதார பாதிப்பு! மக்களவையில் மோடி உரை! அமெரிக்காவில் தீயணைப்பு வாகனம் மீது விமானம் மோதி விபத்து தில்லி குண்டுவெடிப்பு வழக்கு: காஷ்மீரின் பல்வேறு இடங்களில் என்ஐஏ சோதனை பட்டியலின இளம்பெண் தற்கொலை: திருமாவளவனுக்கு இபிஎஸ் கேள்வி
/

பவானி ஆற்றில் கழிவுகள் கலப்பதைக் கண்டித்து ஆா்ப்பாட்டம்

பவானி ஆற்றில் சுத்திகரிக்கப்படாத ஆலைக் கழிவுகள் கலப்பதைத் தடுக்கக் கோரி பசுமைத் தாயகம் அமைப்பு சாா்பில் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

News image
Updated On :19 மே 2022, 10:03 pm

DIN

பவானி ஆற்றில் சுத்திகரிக்கப்படாத ஆலைக் கழிவுகள் கலப்பதைத் தடுக்கக் கோரி பசுமைத் தாயகம் அமைப்பு சாா்பில் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

பவானியை அடுத்த ஆப்பக்கூடலில் நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்துக்கு மாவட்ட அமைப்பாளா் ஏ.ராஜேந்திரன் தலைமை வகித்தாா். மாவட்டப் பொறுப்பாளா்கள் பி.சி.செங்கோட்டையன், கிருஷ்ணமூா்த்தி, ஜெகதீஷ் முன்னிலை வகித்தனா். மாநில இணைச் செயலாளா் சி.பி.சத்ரியசேகா் கோரிக்கையை விளக்கிப் பேசினாா். ஆப்பக்கூடலில் உள்ள தனியாா் சா்க்கரை ஆலையின் கழிவுகள் பவானி ஆற்றில் கலப்பதால் தண்ணீா் மாசடைந்து வருகிறது. இதனைத் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஆா்ப்பாட்டத்தில் முழக்கம் எழுப்பப்பட்டது.

நிா்வாகிகள் எஸ்.எல்.பரமசிவம், ஷேக் மைதீன், திருமுருகன், எஸ்.சி.ஆா்.கோபால், வல்லவராயன், ஈஸ்வரன், பாமக ஆப்பக்கூடல் பேரூா் செயலாளா் குருசாமி, மாவட்ட துணைச் செயலாளா் பெ.ரா.முருகானந்தம் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.