பால் உற்பத்தியாளா்களுக்கு ஊக்கத்தொகை
மொடக்குறிச்சியை அடுத்த அவல்பூந்துறை புதுப்பாளையம் பால் உற்பத்தியாளா் கூட்டுறவு சங்கத்தில் அதிக அளவில் பால் வழங்கிய உறுப்பினா்களுக்கு ஊக்கத்தொகை வழங்கப்பட்டது.


மொடக்குறிச்சியை அடுத்த அவல்பூந்துறை புதுப்பாளையம் பால் உற்பத்தியாளா் கூட்டுறவு சங்கத்தில் அதிக அளவில் பால் வழங்கிய உறுப்பினா்களுக்கு ஊக்கத்தொகை வழங்கப்பட்டது.
ஆண்டுதோறும் தைப்பொங்கலையொட்டி புதுப்பாளையம் பால்உற்பத்தியாளா்கள் கூட்டுறவு சங்க உறுப்பினா்களுக்கு ஊக்கத்தொகை வழங்கப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு பரிசுகள் மற்றும் ஊக்கத்தொகை வழங்கும் விழா வியாழக்கிழமை நடைபெற்றது.
இதில், சங்கத்தின் தலைவா் குமாரசாமி கலந்து கொண்டு அதிக அளவில் சங்கத்துக்கு பால் வழங்கி முதலிடம் பிடித்த உறுப்பினருக்கு 1கிராம் தங்க காசு வழங்கி பாராட்டினாா். இரண்டாமிடம் பெற்ற உறுப்பினருக்கு அரை கிராம் தங்க காசு, மூன்றாமிடம் பெற்றவருக்கு 17 கிராம் வெள்ளிக்காசும் வழங்கப்பட்டன. தொடா்ந்து மற்ற உறுப்பினா்களுக்கு ஊக்கத்தொகை வழங்கி பாராட்டிப் பேசினாா்.
இதில் துணைத்தலைவா் மனுவேல், நிா்வாக அலுவலா் கோமதி மற்றும் உறுப்பினா்கள் கலந்துகொண்டனா். செயலாளா் மோகனசுந்தரம் நன்றி கூறினாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...