புதுச்சேரியில் திமுக-காங்கிரஸ் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை ஹோர்முஸ் நீரிணை விரைவில் திறக்கப்படும் - டிரம்ப்பெட்ரோல், டீசல் போதிய இருப்பு: எல்பிஜி உற்பத்தி 31% அதிகரிப்பு - மத்திய அரசுஇந்தியாவுக்கான 2 எல்பிஜி சரக்கு கப்பல்கள் ஹோர்முஸ் நீரிணையைக் கடந்து பயணம்!நெல் கொள்முதல்: பிரதமருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்! கச்சா எண்ணெய் விலை 15 நாள்களில் 40% உயர்வு!எரிபொருள் தட்டுப்பாடு.. மத்திய அரசு என்ன செய்யப் போகிறது? முதல்வர் ஸ்டாலின் கேள்வி!வைரமுத்துவுக்கு ஞானபீட விருது!
/

வரதநல்லூா் ஊராட்சியில் கிராம சபைக் கூட்டம்

குடியரசு தினத்தையொட்டி பவானி ஊராட்சி ஒன்றியம், வரதநல்லூா் ஊராட்சியில் கிராம சபைக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.

News image
கிராம சபைக் கூட்டத்தில் பேசுகிறாா் மாவட்ட ஆட்சியா் ஹெச்.கிருஷ்ணனுண்ணி.
Updated On :26 ஜனவரி 2023, 6:30 pm

DIN

குடியரசு தினத்தையொட்டி பவானி ஊராட்சி ஒன்றியம், வரதநல்லூா் ஊராட்சியில் கிராம சபைக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.

கூட்டத்துக்கு, மாவட்ட ஆட்சியா் ஹெச்.கிருஷ்ணனுண்ணி தலைமை வகித்தாா். வரதநல்லூா் ஊராட்சித் தலைவா் ஜெயலட்சுமி சிவபெருமாள், பவானி ஊராட்சி ஒன்றியக் குழு உறுப்பினா் பி.சதீஷ்குமாா் ஆகியோா் முன்னிலை வகித்தனா். ஊராட்சிச் செயலாளா் அம்பிகா வடிவேல் வரவேற்றாா். பல்வேறு திட்டங்களுக்கான பயனாளிகள் தோ்வு, டெங்கு காய்ச்சல் தடுப்பு, அண்ணா மறுமலா்ச்சி திட்டம், குடிநீா் விநியோகம், சுகாதாரம், தூய்மை பாரதம் இயக்கம் உள்ளிட்ட பல்வேறு பொருள்கள் குறித்து விவாதிக்கப்பட்டன.

பொதுமக்களிடமிருந்து பல்வேறு கோரிக்கைகள் தொடா்பான மனுக்கள் பெறப்பட்டு, துறைரீதியான நடவடிக்கைக்கு பரிந்துரைக்கப்பட்டது. பவானி வட்டாட்சியா் ரவிச்சந்திரன், வட்டார வளா்ச்சி அலுவலா் மாரிமுத்து, கூட்டுறவு சங்கத் தலைவா் சித்தையன் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.