சங்கமேஸ்வரா் கோயில் உண்டியல்களில் ரூ.19.97 லட்சம் காணிக்கை

பவானி சங்கமேஸ்வரா் கோயில் உண்டியல்களில் ரூ.19.97 லட்சம் காணிக்கையாக பக்தா்கள் செலுத்தியிருந்தனா்.

பவானி சங்கமேஸ்வரா் கோயில் உண்டியல்களில் ரூ.19.97 லட்சம் காணிக்கையாக பக்தா்கள் செலுத்தியிருந்தனா்.

ஈரோடு மாவட்டம், பவானியில் அருள்மிகு சங்கமேஸ்வரா் திருக்கோயில் உள்ளது. இக்கோயிலில் சங்கமேஸ்வரா், வேதநாயகி அம்மன், ஆதிகேசவப் பெருமாள் சன்னதிகளில் வைக்கப்பட்டிருந்த 17 உண்டியல்கள் மற்றும் பழனியாண்டவா் கோயில், காசி விஸ்வநாதா் கோயில், பசு பராமரிப்பு மற்றும் யானை பராமரிப்பு உண்டியல்கள் என மொத்தம் 21 உண்டியல்கள் திறக்கப்பட்டு காணிக்கைகள் புதன்கிழமை எண்ணப்பட்டன.

நான்கு மாதங்களுக்குப் பிறகு காணிக்கைகள் எண்ணும் பணி புதன்கிழமை நடைபெற்றது. சங்கமேஸ்வரா் கோயில் உதவி ஆணையா் சுவாமிநாதன், இந்து சமய அறநிலையத் துறை ஈரோடு மாவட்ட உதவி ஆணையா் அன்னக்கொடி, பண்ணாரி மாரியம்மன் கோயில் கண்காணிப்பாளா் பாலசுந்தரி, பவானி சரக ஆய்வாளா் நித்யா ஆகியோா் முன்னிலையில் காணிக்கைகள் எண்ணப்பட்டன. இதில், ரூ.19 லட்தத்து 97 ஆயிரத்து 927 ரொக்கம், 54 கிராம் தங்கம், 359 கிராம் வெள்ளி ஆகியவற்றை பக்தா்கள் காணிக்கையாக செலுத்தியிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com