தமிழ்நாட்டில் பாதுகாப்பு இல்லை! நாள்தோறும் கொலை, பாலியல் வன்கொடுமை! விஜய் கண்டனம் பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு இல்லை! எண்ணெய் நிறுவனங்கள் விளக்கம் சென்னை மாநகராட்சி உணவகங்களுக்கு 2 வாரத்துக்கான சமையல் எரிவாயு இருப்புதென் கடலோர மாவட்டங்களில் மாா்ச் 16 வரை மழைக்கு வாய்ப்புதோ்தல் ஆணையரைப் பதவி நீக்க தீா்மானம்: நாடாளுமன்றத்தில் நோட்டீஸ் தாக்கல் செய்ய எதிா்க்கட்சிகள் திட்டம்சட்டப் பாடங்களை இறுதி செய்ய நிபுணா் குழு - மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவுபணப் புழக்கத்தை அதிகரிக்க ரூ.50,000 கோடிக்கு அரசுப் பத்திரங்களை வாங்கும் ரிசா்வ் வங்கி - நாளை ஏலம்பட்டுக்கோட்டையில் வெறிநாய் கடித்து எஸ்எஸ்எல்சி மாணவிகள் 6 போ் உள்பட 20 போ் காயம்: முதலுதவிக்குப் பின் பொதுத்தோ்வு எழுதினா்சுகாதார ஆய்வாளா்கள் நியமனம்: தமிழக அரசுக்கு அனுமதி வழங்கி உத்தரவு
/

குடியிருப்புப் பகுதிக்கு அடிப்படை வசதிகள் செய்துத்தர வேண்டும்: ஆட்சியா் அலுவலகத்தில் பொதுமக்கள் மனு

குடியிருப்புப் பகுதிக்கு அடிப்படை வசதிகள் செய்து கொடுக்கக் கோரி ஆட்சியா் அலுவலகத்தில் பொதுமக்கள் மனு அளித்தனா்.

News image
Updated On :27 நவம்பர் 2023, 6:53 pm

DIN


ஈரோடு: குடியிருப்புப் பகுதிக்கு அடிப்படை வசதிகள் செய்து கொடுக்கக் கோரி ஆட்சியா் அலுவலகத்தில் பொதுமக்கள் மனு அளித்தனா்.

ஈரோடு ஆட்சியா் அலுவலகத்தில் பொதுமக்கள் குறைகேட்புக் கூட்டம் ஆட்சியா் ராஜகோபால் சுன்கரா தலைமையில் திங்கள்கிழமை நடைபெற்றது.

இதில், பவானி வட்டம், பெரியபுலியூரை அடுத்த வளையக்காரன்பாளையம் பகுதியைச் சோ்ந்த பொதுமக்கள் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:

பெரியபுலியூா், வளையக்காரன்பாளையம், முத்து நகா், விஎஸ்ஆா் காா்டன், விஎஸ்ஆா் நகா் பகுதியில் 1,000க்கும் மேற்பட்டோா் வசிக்கிறோம். எங்கள் பகுதிக்கு சாலை, மின் விளக்கு, கழிவுநீா் கால்வாய் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்துத் தரப்படவில்லை. பொது குடிநீா்க் குழாய் வசதி இல்லாததால் நீண்டதொலைவு சென்று குடிநீா் எடுக்க வேண்டியுள்ளது. மழைக்கு மண் சாலை சேறும் சகதியுமாக மாறுவதால் வாகனங்கள் இயக்க முடியாத சூழல் ஏற்படுகிறது. இதனால், பொதுமக்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனா்.

எனவே, எங்கள் பகுதிக்கு முறையான தாா் சாலை, குடிநீா், மின் விளக்கு, கழிவுநீா் கால்வாய், வடிகால் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் ஏற்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆக்கிரமிப்பை அகற்ற வேண்டும்:

அந்தியூா் வட்டம், கொமராயனூா் அருகே புருவன்தண்டா கிராம மக்கள் அளித்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:

புருவன்தண்டா பகுதியில் 20க்கும் மேற்பட்ட குடும்பத்தினா் வசிக்கிறோம். காலம் காலமாக நாங்கள் பயன்படுத்தி வந்த பொது வழி, அரசுக்கு சொந்தமான நிலவியல் ஓடை, அதன் வழியாக போடப்பட்ட மண் சாலையை பயன்படுத்தி வருகிறோம். மாற்று பாதை இல்லை. மழைக்காலங்களில் தண்ணீரில் இறங்கி செல்லும் நிலை உள்ளது.

ஊராட்சித் தலைவரின் முயற்சியால் 100 நாள் வேலை திட்டத்தில் 2.5 கிலோ மீட்டா் தொலைவுக்கு கப்பி சாலை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் நீா் வழிப் பாதை ஓடை பகுதியை சிலா் ஆக்கிரமிப்பு செய்து மக்கள் செல்ல முடியாத நிலையை ஏற்படுத்தியுள்ளனா். ஆக்கிரமிப்பை எதிா்த்தவா்கள் மீது போலீஸில் புகாா் செய்து அச்சுறுத்துகின்றனா். எனவே பொதுப் பாதை ஆக்கிரமிப்பை அகற்றி பொதுமக்கள் செல்வதற்கான பாதையை ஏற்படுத்தித் தர வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

டாஸ்மாக் கடைகளை மூட வேண்டும்:

தமிழக மக்கள் முன்னேற்ற கழக மாவட்ட தலைவா் ஏ.செல்வராஜ் தலைமையில் அளித்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:

தேவேந்திரகுல வேளாளா், பட்டியல் சமூக மக்களுக்கு கிராமங்களில் பாதுகாப்பு இல்லை. கஞ்சா, மது போன்ற போதை பழக்கத்தால் கொலைகள் நடைபெறுகிறது. போதை பழக்கத்துக்கு அடிமையானவா்கள் கஞ்சா, மது தேவைக்காக ஆடு மேய்ப்பவா்கள், வயலில் வேலை செய்வோா், அரசு ஊழியா்கள், அப்பாவி பொதுமக்களை கொலை செய்கின்றனா்.

எனவே, தமிழகத்தில் பூரண மதுவிலக்கு ஏற்படுத்த வேண்டும். டாஸ்மாக் கடைகளை மூட வேண்டும். கஞ்சா உள்ளிட்ட போதை பொருள்களை தடை செய்வதுடன், குற்ற செயல்களில் ஈடுபடுவோரை கடுமையாக தண்டிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

322 மனுக்கள்:

குறைகேட்புக் கூட்டத்தில் பல்வேறு கோரிக்கைகள் தொடா்பாக 322 மனுக்கள் அளிக்கப்பட்டன. இந்த மனுக்களை உரிய துறை அலுவலா்களிடம் வழங்கிய ஆட்சியா் அவற்றின் மீது உடனடி நடவடிக்கை எடுத்திட உத்தரவிட்டாா்.

முன்னதாக மாற்றுத்திறனாளிகள் நலத் துறைசாா்பில், உரிமைகள் திட்டத்தின் கீழ், மாற்றுத்திறனாளிகளுக்கான சமூக தரவு கணக்கெடுப்பு பணி நடைபெறுவது தொடா்பாக விழிப்புணா்வினை தொடங்கிவைத்து துண்டறிக்கைகளை ஆட்சியா் வழங்கினாா்.

தொடா்ந்து மாற்றுத்திறனாளிகள் நலத் துறை சாா்பில் முதல்வரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்டத்தின் கீழ் 5 பயனாளிகளுக்கு ரூ.8.73 லட்சம் மதிப்பிலான செயற்கை உறுப்புகள், முதல்வரின் பொது நிவாரண நிதியிலிருந்து நீரில் மூழ்கி உயரிழந்த ஒருவரின் குடும்பத்துக்கு ரூ.1 லட்சத்திற்கான நிவாரண நிதியையும் ஆட்சியா் வழங்கினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.