பழனி சட்டப்பேரவைத் தொகுதியில் பிரசாரம் செய்த நடிகர் பிரகாஷ் ராஜ், சினிமாவில்தான் ஒரே பாட்டில் மருத்துவர், பொறியாளர் ஏன் முதல்வராகக் கூட ஆகலாம், ஆனால் நிஜத்தில் அப்படி நடக்காது என்று கூறியிருக்கிறார்.
ஏப்ரல் 23ஆம் தேதி தமிழக சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெறவிருக்கும் நிலையில் பிரசாரங்கள் சூடுபிடித்துள்ளன.
சட்டப்பேரவைத் தேர்தலில் பழனி தொகுதியில் திமுக கூட்டணி சார்பில் போட்டியிடும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் என். பாண்டி-க்கு ஆதரவாக பிரகாஷ் ராஜ் நேற்று பிரசாரத்தில் ஈடுபட்டார். திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி வேட்பாளர் தோழர் என். பாண்டி அவர்களுக்கு அரிவாள், சுத்தியல், நட்சத்திரம் சின்னத்துக்கு வாக்களிக்க வேண்டும் என்று அவர் மக்களிடையே பிரசாரம் செய்தார்.
தொடர்ந்து பேசிய அவர், உங்கள் வாக்கு ஒற்றுமைக்கா? பிரிவினைக்கா? நடைபெறவிருக்கும் சட்டப்பேரவைத் தேர்தல் ஒற்றுமைக்கும் பிரிவினைக்கும் இடையேயான தேர்தல். மதுரையை இன்னொரு மணிப்பூராக மாற்றத் துடிக்கிறார்கள். பாஜக திருப்பரங்குன்றத்தில் எப்படி பிரச்னையை உருவாக்கினார்களோ, அதேபோல பழனிக்கு வர இருக்கிறார்கள். இவர்களுக்கு இந்துக்கள் மீது அன்பு அல்ல, அதிகாரத்திற்கான ஆதாயமே. எனவே, பழனி தொகுதியில் போட்டியிடும் தோழர் என். பாண்டி அவர்களுக்கு வாக்களியுங்கள் என்று கேட்டுக் கொண்டார்.
தொடர்ச்து பேசிய அவர், நட்சத்திரம் என்ற ஒரு அந்தஸ்தும், அவர்கள் திரையில் தோன்றும் கதாப்பாத்திரங்களும் அரசியல் அதிகாரத்தைக் கைப்பற்றவோ, சமூகப் பணியை அவர்கள் மேற்கொண்டதற்கான வரலாறாகவோ இருக்காது. அரசியலில், சினிமா மாடல்களுக்கு ஆதரவாக வாக்களிக்காதீர்கள் என்றும் கூறினார்.
சினிமாவில்தான் யார் ஒருவரும் மருத்துவர், பொறயிளர் ஏன் முதல்வர்கூட ஆகிவிடலாம். ஆனால், உண்மையில் தமிழகம் அதன் மொழி உரிமைக்காகப் போராடியபோதும், மக்கள் துன்பங்களை அனுபவித்த போதும், சுய மரியாதைக்காக போராடிய போதும் நீங்கள் எல்லாம் எங்கே என்ன செய்து கொண்டிருந்தீர்கள்.
ஒரு நடிகனைப் பார்த்து விசிலடிக்கலாம். ஆனால் நாட்டைக் கொடுக்க முடியாது. அரசியல் என்பது மக்கள் உங்களிடம் காணும் நட்பு, காதல், திறமை போன்றது அல்லது, உண்மையில் அதனை நீங்கள் பயன்படுத்திக்கொள்ளப் பார்க்கிறீர்கள்.
ஒரு ரசிகனாக நானும் தொண்டை வறண்டு போகும் வரை விசிலடிப்பேன். ஆனால், என்னுடைய நாட்டை அவர்களிடம் தூக்கிக் கொடுத்துவிட மாட்டேன். அரசியல் என்பது வேறு, சினிமா என்பது வேறு. பொறுப்பு என்பது வேறு. வெற்றி பெறுபவர்கள் மக்களுக்காக வேலை செய்ய வேண்டும். ஆனால் இங்கே அரசியல் செய்கிறார்கள் என்பது வேதனையாக உள்ளது என்றும் கூறியுள்ளார்.
Summary
Actor Prakash Raj directly attacked Vijay and campaigned, saying that one can become the Chief Minister in a single bottle only in cinema but that does not happen in reality.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
ஜிவி பிரகாஷின் ஹேப்பி ராஜ்: ஓடிடியில் எப்போது?

கடவுள் நம்பிக்கையில்லை; ஆனால்... பிரகாஷ் ராஜ் பதிலுக்குப் பெருகும் ஆதரவு!

வெற்றிக்குத் திரும்பினாரா ஜி. வி. பிரகாஷ்? ஹேப்பி ராஜ் - திரை விமர்சனம்!

தந்தைகளுக்குச் சமர்ப்பணம்..! வரவேற்பைப் பெறும் ஜிவியின் ஹேப்பி ராஜ்!
வீடியோக்கள்

தொகுதி மறுவரையறை ஏன்? எதற்கு?எப்படி?| UN Kannan Interview | Delimitation | Women's reservation bill
தினமணி செய்திச் சேவை

Podcast | மகளிர் இடஒதுக்கீடா தொகுதி மறுவரையறையா?: முழுப் பின்னணி! | News & Views | E-27 |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையும் எதிர்ப்பும்! தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை


