ஜிவி பிரகாஷ் குமாரின் ஹேப்பி ராஜ் படத்தின் ஓடிடி வெளியீடு தொடர்பாக தகவல் தெரியவந்துள்ளது.
ஜி.வி.பிரகாஷ் தயாரித்து நடித்த கிங்ஸ்டன் திரைப்படம் எதிர்பார்த்த வெற்றியைப் பெறவில்லை. இதனைத் தொடர்ந்து, அவர் நடித்த பிளாக்மெயில் திரைப்படமும் கலவையான விமர்சனங்களைப் பெற்றிருந்தது.
தொடர்ந்து, கடந்த மார்ச் 27 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியான ஹேப்பி ராஜ் படத்துக்கு கலவையான விமர்சனங்கள் வந்தாலும் ரசிகர்கள் மத்தியில் கவனம் பெற்றது.
நடிகர் பிரதீப் ரங்கநாதனின் உதவி இயக்குநராக பணிபுரிந்த மரியா இளஞ்செழியன் இயக்கத்தில் ஜிவி பிரகாஷ் நடிப்பில் ஹேப்பி ராஜ் படத்தில், ஜிவி பிரகாஷுக்கு ஜோடியாக நடிகை கௌரி பிரியாவும் முக்கிய கதாபாத்திரங்களில் அப்பாஸ் மற்றும் ஜார்ஜ் மரியன் உள்ளிட்டோரும் நடித்துள்ளனர். ஜஸ்டின் பிரபாகரன் இசையமைத்துள்ளார்.
அப்பா - மகன் பாசத்தையும் ஜாலியான காதல் கதையையும் பதிவு செய்த இப்படம் வசூலில் நல்ல வெற்றியைப் பெறும் என்றே கணிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், ஹேப்பி ராஜ் திரைப்படம் வரும் ஏப். 24 ஆம் தேதி அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் வெளியாகும் என்று தகவல் தெரியவந்துள்ளது.
Summary
Information has emerged regarding the OTT release of G.V. Prakash Kumar's film, Happy Raj.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

ஜிவி பிரகாஷ் நடிக்கும் வெக்கை! போஸ்டர் வெளியீடு!
ஜிவி பிரகாஷின் இம்மோர்டல் படப்பிடிப்பு நிறைவு!
ஓடிடியில் வெளியானது ஹேப்பி ராஜ்!

ஹேப்பி ராஜ் படத்தின் ஓடிடி வெளியீட்டுத் தேதி! அதிகாரப்பூர்வ அறிவிப்பு!
விடியோக்கள்

”வட மாநிலத்தவர்களுக்கும் மகளிர் உரிமைத்தொகை? Full Report விரைவில்!”: அமைச்சர் மரிய வில்சன்!

UN Kannan Interview | F3 விவகாரம்.. எதிர்கொள்ளுமா இந்தியா?| Economic crisis | PM Modi | Rahul |India



