நேபாள வெள்ளத்துக்கு நாங்கள் காரணமல்ல - சீனாசிஜேபி செய்தித் தொடர்பாளர்கள் மீது கடும் கோபம்: அபிஜீத் தீப்கே பேச்சு!பொறியாளர்களுக்கு பதிலாக 86% செய்யறிவைப் பயன்படுத்தும் பைசா பஜார் நிறுவனம்!பெட்ரோலில் கலக்கப்படும் எத்தனால் அளவு எவ்வளவு? மனுவை நிராகரித்த உச்ச நீதிமன்றம்நாட்டில் ஐபோன் தயாரிப்பை 30 - 35% உயர்த்தும் ஆப்பிள்!மூன்றாவது குழந்தை பெறும் அரசு பெண் ஊழியா்களுக்கு ஓராண்டு விடுப்பு! அரசாணை வெளியீடுஈரான் போருக்கு மத்தியில் நாட்டின் ஜிடிபி 7.8% உயர்வு

வெற்றிக்குத் திரும்பினாரா ஜி. வி. பிரகாஷ்? ஹேப்பி ராஜ் - திரை விமர்சனம்!

ஹேப்பி ராஜ் திரைப்படத்தின் விமர்சனம்...

gv prakash and gouri priya

ஜி. வி. பிரகாஷ், கௌரி பிரியா - movie poster

Published On :30 மார்ச் 2026, 2:02 pm IST

ஹேப்பி ராஜ் - திரை விமர்சனம்

2.5/5

நடிகர் ஜிவி பிரகாஷின் ஹேப்பி ராஜ் திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகியுள்ளது.

ஜிவி பிரகாஷின் தந்தையான ஜார்ஜ் மரியனின் தோற்றத்தை வைத்து ஊரே குதிரை முட்டை எனக் கிண்டல் செய்கிறது. அப்பாவுடன் வெளியே செல்லும்போது ஜிவியையும் சின்ன குதிரை முட்டை எனக் கூறுவதால் அவமானம் அடையும் ஜிவி, தன் தந்தையைவிட்டு விலகியிருக்கவே முயற்சிகளை மேற்கொள்கிறார். அப்படியான சூழலில் ஜிவிக்கு காதல் மலர்கிறது. ஆனால், காதலியோ, ‘குதிரை முட்டைன்னு என்னயும் அசிங்கப்படுத்துவாங்க’ என காதலை முறித்துக்கொள்கிறார். தந்தையால் காதலும் போனது என்கிற வெறுப்பில் இருக்கும் ஜிவி சொந்த ஊரைவிட்டு பெங்களூரில் வேலைக்குச் சேர்கிறார். அங்கு, நாயகி கௌரி பிரியாவைச் சந்திக்கும் ஜிவிக்கு அவர் மீது காதல் வருகிறது. ஆனால், நம் அப்பாவைக் காரணம் காட்டி இந்தக் காதலும் போய்விடுமோ? என்கிற பயமும் எழுகிறது. ஒரு தந்தையாக ஜார்ஜ் மரியன் எப்படியானவர்? நம் பெற்றோர்களால் நாம் அவமானப்படுகிறோம்? என்கிற மீதக்கதைகளுடன் ஹேப்பி ராஜ் சொல்லப்பட்டிருக்கிறது.

இன்றைய இளம் தலைமுறையினருக்கு ஏதாவது ஒரு வலுவான கருத்தைச் சொல்ல வேண்டும் என்கிற ஊக்கம் இருக்கிறது. ஆனால், அதனுடைய தாக்கத்தைச் சரியாக கொண்டு செல்ல முடிகிறதா? என்கிற கேள்விகளில்தான் சில தடுமாற்றங்கள் நிகழ்கின்றன.

அறிமுக இயக்குநரான மரியா ராஜா இளஞ்செழியன் இயக்கிய ஹேப்பி ராஜும் அப்படி கலவையான படமாகவே இருக்கிறது. முதல் பாதியில் கொஞ்சம் நகைச்சுவைகள் கைகொடுத்தாலும் சில இடங்களில் இதெல்லாம் காமடியா? எனக் கேட்க வைக்கின்றனர். அப்பா - மகன் உணர்வைச் சொல்ல முயன்ற இடங்கள் உணர்வுப்பூர்வமாக இருந்தாலும் சில காட்சிகளில் ஒன்ற முடியாதது போல் இருப்பது பலவீனம். கிளைமேக்ஸில் கவனம் செலுத்திய இயக்குநர் முதல்பாதியிலும் பலமான காட்சிகளை எழுதியிருந்தால் ரசிகர்களும் ஹேப்பி-ஆக இருந்திருப்பார்கள். ஆனால், அது நடக்கவில்லை.

தமிழ் சினிமாவில் இப்போது அப்பா - மகன் காலம் போல. வித் லவ், யூத் வரிசையில் ஹேப்பி ராஜும் இடம்பிடித்திருக்கிறது. அப்பா - மகன் என்றாலே டாக்ஸிக் உறவாக இருக்கும் என கதையை எழுதுபவர்கள் விதவிதமாக எழுதி இறுதியில் மகன் கண்ணீர்விட்டு காலைப்பிடிக்கும் போது சுபம் போட்டு விடுகிறார்கள். ஆனால், மேலே சொன்ன படங்களில் அந்த உறவு எவ்வளவு ஆழமானது என உணர்ப்பூர்வமாக மாற்றுவதில் கொஞ்சம் சொதப்பல்கள் நடந்துவிடுகின்றன. ஹேப்பி ராஜும் காதல் கதையா இல்லை, அப்பா - மகன் கதையா என அங்கே இங்கே தடுமாறி முடிகிறது.

Listicle image

ஜார்ஜ் மரியன் - அப்பாஸ் பேசிக்கொள்ளும் காட்சிகள் தந்தையாக அவரது உணர்வுகளை அழகாக காட்டினாலும் அழுத்தமற்ற திரைக்கதையால் நல்ல படமாக மாறியிருக்க வேண்டிய ஹேப்பி ராஜ், பார்க்கலாம் என்கிற தரத்துடன் நின்றுவிடுகிறது.

ஜிவி பிரகாஷின் கடந்த சில திரைப்படங்களை ஒப்பிட்டால் ஹேப்பி ராஜ் ஓரளவு வெற்றிப்படமாகவே இருக்கும். கதையாகவும் உருவாக்கமாகவும் ஜிவியைக் காப்பாற்றியிருக்கிறது. ஜிவியிடம் இருக்கும் இளமையான தோற்றம் அவரை இந்த மாதிரியான கதைகளில் சரியாகவும் பொருத்திவிடுகிறது.

இக்கதையின் நாயகனாகவே அசத்தியிருக்கிறார் நடிகர் மரியம் ஜார்ஜ். டிராகன் திரைப்படத்தின் அப்பா போலவே இதிலும் மகனுக்கான அப்பாவாக பல இடங்களில் பிரமாதமாக நடித்திருக்கிறார். முக்கியமாக, கிளைமேக்ஸ் காட்சி. ஜார்ஜ் மரியத்தை விட்டால் வேறு யாரும் சரியாக இருக்க மாட்டார்கள் என்கிற இடத்திற்குத் தன் நடிப்பில் நகர்ந்தும் விட்டார்.

ஸ்டைலான ஒளிப்பதிவு, நல்ல உருவாக்கம் என்றாலும் முதல்பாதியும் இரண்டாம்பாதியும் வேறு வேறு எண்ணங்களைக் கொடுப்பதால் ஹேப்பி ராஜிடம் எதிர்பார்த்த ஹேப்பி இல்லை என்கிற எண்ணத்திற்குதான் செல்ல வேண்டியிருக்கிறது.

Summary

actor gv prakash' happy raj movie released in theatres and movie gets mixed reviews

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.