நடிகர் ஜிவி பிரகாஷ் நடிப்பில் உருவாகும் திரைப்படத்தின் பெயர் போஸ்டர் வெளியாகியுள்ளது.
இசையமைப்பில் 100 திரைப்படங்களைக் கடந்த ஜிவி பிரகாஷ் நடிப்பிலும் கவனம் செலுத்தி வருகிறார். இறுதியாக, இவர் நடிப்பில் வெளியான ஹேப்பி ராஜ் திரைப்படம் கலவையான விமர்சனங்களைப் பெற்றது.
இதற்கிடையே, தெலுங்கு மற்றும் தமிழ்த் திரைப்படங்களுக்கு இசையமைத்தும் வருகிறார். தற்போது, ஜோ படத்தின் இயக்குநர் இயக்கும் புதிய படத்தில் கிரிக்கெட் வீரராக நடிக்கவுள்ளார்.

தற்போது, இயக்குநர் பா. இரஞ்சித்தின் நீலம் புரடக்ஷன்ஸ் நிறுவனம் மற்றும் டிவைன் புரடக்ஷன்ஸ் இணைந்து தயாரிக்கும் புதிய திரைப்படத்தில் ஜிவி நடித்து முடித்துள்ளார். இயக்குநர் பா. இரஞ்சித்தின் நீண்டகால இணை இயக்குநரான அகிரன் மோசஸ், இப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகிறார்.
சென்னையை மையமாக வைத்து உருவாகும் இப்படத்திற்கு, ‘வெக்கை’ எனப் பெயரிட்டுள்ளதாக போஸ்டர் வெளியிட்டு அறிவித்துள்ளனர். வில்லனாக பிரபல மலையாள நடிகர் ஸ்ரீநாத் பாசியும் நாயகியாக ஷிவானி ராஜசேகர் நடித்துள்ளனர். இப்படம் அடுத்த சில மாதங்களில் திரைக்கு வருமென எதிர்பார்க்கப்படுகிறது.
The title poster for the upcoming film starring actor G.V. Prakash has been released.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
ஜிவி பிரகாஷின் இம்மோர்டல் படப்பிடிப்பு நிறைவு!

ஆளுநரின் நடத்தை அருவருக்கத்தக்கது! விஜய்க்கு ஆதரவாக பிரகாஷ் ராஜ் பதிவு

கிரிக்கெட் வீரராக நடிக்கும் ஜிவி பிரகாஷ்!
ஜிவி பிரகாஷின் ஹேப்பி ராஜ்: ஓடிடியில் எப்போது?
விடியோக்கள்

UN Kannan Interview | F3 விவகாரம்.. எதிர்கொள்ளுமா இந்தியா?| Economic crisis | PM Modi | Rahul |India

சூர்யவன்ஷியையும் ஆர்ச்சரையும் மட்டும் நம்புனா...: கில்லி போல் ஆடிய கில்!
Jailer -2 படத்தில் Hrithik Roshan சிறப்புத் தோற்றம்? | Cinema updates |




