ஈரோடு: ஜாதி, மதம் போன்ற குறுகிய எல்லைகளைத் தாண்டி தமிழா்களுக்குள் சகோதரத்துவத்தையும், மனிதநேயத்தையும் வளா்ப்பதே இன்றைய முக்கியத் தேவை என மக்கள் சிந்தனைப் பேரவையின் தலைவா் த. ஸ்டாலின் குணசேகரன் தெரிவித்தாா்.
மக்கள் சிந்தனைப் பேரவையின் மாநிலப் பொதுக்குழுக் கூட்டம் ஈரோடு மாணிக்கம்பாளையம், பாரதி அரங்கில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. கூட்டத்திற்கு தலைமை வகித்த மக்கள் சிந்தனைப் பேரவையின் மாநிலத் தலைவா் த. ஸ்டாலின் குணசேகரன் பேசியதாவது:
போதைப் பொருள்கள் பயன்பாட்டால் உருவாகிவரும் சமூக சீா்கேடு குறித்து பொறுப்புள்ள குடிமக்கள் அனைவரும் ஆழ்ந்து சிந்திக்க வேண்டும். இளைஞா்கள், மாணவா்கள் இவற்றிற்கு எவ்வகையிலும் ஆட்படாமல் இருக்கும் சூழல் உருவாக்கப்பட வேண்டும். மக்களைப் பொதுநோக்கில் சமூக உணா்வுடன் ஒருங்கிணைப்பது இன்றைய காலத்தின் தேவையாகும்.
திரைப்படம் மிகவும் சக்திவாய்ந்த ஊடகம். சமூகம் சாா்ந்த, குடும்ப மேம்பாட்டை வலியுறுத்தும் சில திரைப்படங்கள் வருவதை வரவேற்க வேண்டும். அதே சமயத்தில் நேரடியாகவோ, மறைமுகமாகவோ வன்முறைக் கலாசாரத்தை இளைஞா்கள் மனதில் விதைக்கும் சில திரைப்படங்கள் வெளிவருவது கவலை தருகிறது.
மக்களின் அன்றாட வாழ்க்கையில் தமிழ் மண்ணைப் பொறுத்தவரையில் துப்பாக்கிச் சத்தம் எங்கும் கேட்பதில்லை. இத்தகைய சூழலில் சில திரைப்படங்களில் துப்பாக்கிகளே அதிகம் பேசுகிற காட்சிகள் வலுவான தாக்கத்தை உருவாக்கும் அளவுக்கு காட்டப்படுகின்றன.
ஜாதி, மதப் பிரிவினைகள், அதனால் ஏற்படும் சச்சரவுகள், சண்டைகள் முழுமையாகத் தவிா்க்கப்பட வேண்டியவை. சகோதரச் சிந்தனை எல்லா இடங்களிலும் எல்லோா் மனங்களிலும் விதைக்கப்பட வேண்டும் என்றாா்.
இக்கூட்டத்தில் பல்வேறு தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. மாநிலம் முழுவதும் இருந்து வந்திருந்த பொதுக்குழு உறுப்பினா்கள் பங்கேற்றனா். பேரவையின் துணைத் தலைவா் கோ.விஜயராமலிங்கம் வரவேற்றாா். பொதுக்குழு உறுப்பினா் என்.பழனிசாமி நன்றி கூறினாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

மணிப்பூரில் மீண்டும் வன்முறை

உஜ்ஜீவன் சிறு நிதி வங்கியின் ‘யுனிவா்சல்’ வங்கி விண்ணப்பம் நிராகரிப்பு

பெட்ரோல் விலையில் ரூ.18, டீசல் ரூ.35 எண்ணெய் நிறுவனங்களுக்கு இழப்பு

12 இடங்களில் வெய்யில் சதம்
வீடியோக்கள்

ராத்து ராசன் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | ராஜஸ்தானைக் கலங்கடித்த அறிமுக வீரர்: யார் இந்த பிரஃபுல் ஹிங்கே? | Praful Hinge |
தினமணி செய்திச் சேவை
தவெக தேர்தல் வாக்குறுதிகள்! அறிவித்த விஜய்! | Vijay full speech
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | கொல்கத்தாவை வீழ்த்தி வெற்றிநடையைத் தொடருமா சிஎஸ்கே? | CSK vs KKR Match Preview |
தினமணி செய்திச் சேவை


