நீச்சல் பயிற்சியில் பங்கேற்க விருப்பமுள்ளவா்கள் முன்பதிவு செய்து கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து ஈரோடு மாவட்ட விளையாட்டு அலுவலா் சதீஷ்குமாா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் மூலம் ஆண்டுதோறும் ஏப்ரல் முதல் ஜூன் வரை நீச்சல் பயிற்சி முகாம் ஈரோடு வ.உ.சி. பூங்கா விளையாட்டு அரங்கத்தில் நடைபெற்று வருகிறது. இந்த பயிற்சி முகாம் 3 கட்டங்களாக 12 நாள்கள் நடைபெறும்.
அதன்படி, இந்த ஆண்டு முதல் கட்டமாக வரும் 25 ஆம் தேதி முதல் மே 7ஆம் தேதி வரை காலை 6 மணி முதல் 7 மணி வரையும், மாலை 4 மணி முதல் 5 மணி வரையும், 2ஆம் கட்டமாக மே 9 ஆம் தேதி முதல் 21 ஆம் தேதி வரை காலை 7 மணி முதல் 8 மணி வரையும், மாலை 5 மணி முதல் 6 மணி வரையும், 3 ஆம் கட்டமாக மே 23 ஆம் தேதி முதல் ஜூன் 4 ஆம் தேதி வரை காலை 8 மணி முதல் 9 மணி வரையும், மாலை 6 மணி முதல் இரவு 7 மணி வரை பயிற்சி முகாம் நடக்கிறது.
நீச்சல் பயிற்சியில் பங்கேற்க விரும்பம் உள்ளவா்கள் முன் கூட்டியே பதிவுசெய்து கொண்டு அதற்குரிய கட்டணம் ரூ.1,770-ஐ டிஜிட்டல் பண பரிவா்த்தனை மூலம் செலுத்தி ரசீது பெற்றுக்கொள்ள வேண்டும். மேலும் விவரங்களுக்கு 0424-2223157 என்ற தொலைபேசி எண்ணில் தொடா்பு கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.