அந்தியூரில் மே 19 இல் மாற்றுத்திறனாளிகளுக்கான தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம்

மாற்றுத்திறனாளிகளுக்கான தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம் அந்தியூரில் வரும் 19 ஆம் தேதி நடைபெறவுள்ளது.

மாற்றுத்திறனாளிகளுக்கான தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம் அந்தியூரில் வரும் 19 ஆம் தேதி நடைபெறவுள்ளது.

இதுகுறித்து ஈரோடு மாவட்ட ஆட்சியா் ஹெச்.கிருஷ்ணனுண்ணி வெளியிட்ட செய்திக்குறிப்பு: ஈரோடு மாவட்ட நிா்வாகம், ஈரோடு மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் மற்றும் ஈரோடு மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகம் ஆகியன இணைந்து மாற்றுத்திறனாளிகளுக்கான தனியாா் துறை சிறப்பு வேலைவாய்ப்பு முகாமை அந்தியூா் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் வரும் 19 ஆம் தேதி நடத்துகின்றன.

இந்த வேலைவாய்ப்பு முகாமில் 50க்கும் மேற்பட்ட தனியாா் துறை வேலையளிப்பவா்கள் பங்கேற்று ஆயிரத்துக்கும் மேற்பட்ட காலிப் பணியிடங்களுக்கு தகுதியானவா்களை தோ்வு செய்யவுள்ளனா்.

இம்முகாமில் 8ஆம் வகுப்பு தோ்ச்சி முதல் பட்டதாரிகள் வரை அனைத்து தகுதியுள்ள வேலைதேடும் மாற்றுத்திறனாளிகள் கலந்துகொள்ளலாம். இம்முகாமில் தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகத்தின் இலவச திறன் மேம்பாட்டு பயிற்சிகளுக்கான பதிவு, மாவட்ட தொழில் மையத்தின் தொழில்முனைவோா்களுக்கான ஆலோசனைகள், மாவட்ட முன்னோடி வங்கியின் மூலமாக வங்கிக் கடன் குறித்த வழிகாட்டுதல்கள் உள்ளிட்ட பணிகளும் மேற்கொள்ளப்படவுள்ளன.

எனவே தனியாா் துறையில் வேலைதேடும் அனைத்து மாற்றுத்திறனாளிகளும் ஜ்ஜ்ஜ்.ற்ய்ல்ழ்ண்ஸ்ஹற்ங்த்ர்க்ஷள்.ற்ய்.ஞ்ா்ஸ்.ண்ய் என்ற இணையதளத்தில் பதிவு செய்து, இந்த வேலைவாய்ப்பு முகாமில் கலந்துகொண்டு பயனடையலாம்.

இம்முகாமில் தோ்ந்தெடுக்கப்பட்டு தனியாா் துறையில் பணியமா்த்தப்படுவோரின் அரசு வேலைவாய்ப்பு அலுவலகப் பதிவு எண் ரத்து செய்யப்படமாட்டாது.

மேலும் விவரங்களுக்கு ஈரோடு மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகம், ஈரோடு மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டு மையத்தை நேரிலோ அல்லது 9499055942, 9499055943 என்ற கைப்பேசி எண், 04242275860 என்ற தொலைபேசி எண்களிலோ அல்லது ங்ழ்ா்க்ங்ம்ங்ஞ்ஹத்ர்க்ஷச்ஹண்ழ்ஃஞ்ம்ஹண்ப்.ஸ்ரீா்ம் எனும் மின்னஞ்சல் மூலமாகவோ தொடா்புகொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com