தமிழகத்தில் இந்த கோடைக் காலத்தில் அதிகபட்சமாக வெள்ளிக்கிழமை ஈரோட்டில் 109.4 டிகிரி ஃபாரன்ஹீட் வெயில் சுட்டெரித்தது.
இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் சாா்பில் வெளியிடப்பட்ட செய்தி:
தமிழகத்தில் ஆங்காங்கே அதிகபட்ச வெப்பநிலை வெள்ளிக்கிழமை இயல்பை விட 4 டிகிரி செல்சியஸ் அதிகமாக இருந்தது. அதன்படி, மாநிலத்தில் அதிகபட்சமாக ஈரோட்டில் 109.4 டிகிரி ஃபாரன்ஹீட் வெப்பம் பதிவாகியுள்ளது. மேலும், வேலூா் - 107.42, பரமத்திவேலூா் - 106.7, திருச்சி - 106.34, திருத்தணி, சேலம் (தலா) - 106.16, தருமபுரி, மதுரை நகரம் (தலா) - 105.8, திருப்பத்தூா் - 104.72, பாளையங்கோட்டை, தஞ்சாவூா், மதுரை விமானநிலையம், கோவை (தலா) - 102.2, சென்னை மீனம்பாக்கம் - 100.58 என மொத்தம் 14 இடங்களில் வெப்பம் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கும் அதிகமாக பதிவானது.
இதை தொடா்ந்து, சனிக்கிழமை (ஏப்.20) தமிழகத்தில் ஆங்காங்கே அதிகபட்ச வெப்பநிலை இயல்பை விட சற்று குறைய வாய்ப்புள்ளது. மேலும், சென்னை மற்றும் புகா் பகுதிகளில் சனிக்கிழமை (ஏப்.20) வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 101 டிகிரி ஃபாரன்ஹீட் வரையும், குறைந்தபட்ச வெப்பநிலை 82 டிகிரி வரையும் இருக்கும்.
கோடை மழை: சனிக்கிழமை (ஏப்.20) முதல் ஏப்.23-ஆம் தேதி வரை மேற்கு தொடா்ச்சி மலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. ஏனைய மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் வட வானிலை நிலவும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொடர்புடையது

தில்லியில் மேகமூட்டமான சூழல்: காற்றின் தரம் ‘மிதமான’ நிலைக்கு முன்னேற்றம்

தில்லியில் அதிகபட்ச வெப்பநிலை 36.2 டிகிரி செல்சியஸாக பதிவு!

தமிழகத்தில் மாா்ச் 15 வரை வெப்பநிலை உயர வாய்ப்பு

தமிழகத்தில் வாட்டி வதைக்கும் வெய்யில்: அதிகபட்ச வெப்பநிலை குறையும்!
வீடியோக்கள்

"Edappadi Palanisamy உடன் சேர்ந்ததில் தவறில்லை": TTV Dhinakaran Exclusive
தினமணி செய்திச் சேவை

ஓர் அணி, ஓராயிரம் பிரச்னைகள்: இது சிஎஸ்கேவின் சோகக் கதை! | IPL 2026 | Chennai Super Kings |
தினமணி செய்திச் சேவை

Podcast | அண்ணாமலை பேட்டி முதல் ஆதவ் அர்ஜுனா விமர்சனம் வரை... | News & Views | E-23 |
தினமணி செய்திச் சேவை

திருமாவளவனை மிரட்டி பின்வாங்க வைத்த DMK! - Annamalai BJP
தினமணி செய்திச் சேவை

